யாருடா இந்த பையன்? லக்னோவை மிரட்டி விட்ட டெல்லி ஹீரோ அசுதோஷ் சர்மா!

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் கடைசி விக்கெட் மட்டுமே கையில் இருந்த நிலையில், அசுதோஷ் சர்மா அபாரமாக சிக்ஸர் விளாசி அணியை வெற்றி பெற வைத்தார்.

ashutosh sharma

டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் 4-வது போட்டி மார்ச் 25-ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டெல்லி அணியும், லக்னோ அணியும் மோதியது. இந்த போட்டியில் டெல்லி அணி வெற்றி தான் தலைப்பு செய்தியாகவும் மாறியுள்ளது. டெல்லி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமே அசுதோஷ் சர்மாவின் அதிரடி ஆட்டம் தான் என்று சொல்லலாம். ஏனென்றால், லக்னோ வைத்த 210 என்ற இலக்கை துரத்தி கொண்டிருந்த டெல்லி அணியில் கடைசி நேரத்தில் விக்கெட்கள் தொடர்ச்சியாக விழுந்து கொண்டிருந்தது.

உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் 18.3 ஓவர்களில் 192 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்திருந்தது. கையில் ஒரு விக்கெட் மட்டுமே இருந்த நிலையில், 9 பந்துகளில் 18 ரன்கள் தேவைப்பட்டது. அந்த சூழலில் பயப்படாமல் களத்தில் நின்ற அசுதோஷ் சர்மா அதிரடியாக விளையாடு 31 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து 19.3 ஓவர்களில் அணியை வெற்றிபெற வைத்துவிட்டார். ஆஷுதோஷ் ஆரம்பத்தில் மெதுவாக தொடங்கினாலும் (20 பந்துகளில் 20 ரன்கள்), பின்னர் அதிரடியாக ஆடி கடைசி 11 பந்துகளில் 46 ரன்கள் விளாசினார். இவரது ஆட்டம் டெல்லி அணியின் வரலாற்றில் மிக உயர்ந்த சேஸிங் (highest successful chase) ஆக பதிவானது.

இப்படியான அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்திய அசுதோஷ் சர்மா பெயர் நேற்று உலகம் முழுவதும் ட்ரென்டிங் ஆகிவிட்ட நிலையில், யார் இந்த பையன் என இணையவாசிகள் தேட தொடங்கிவிட்டிட்டார்கள். அவர்களுக்காகவே யார் இவர் இவரை அணி எவ்வளவு ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது என்பது பற்றி பார்ப்போம்.

யார் இந்த அசுதோஷ் சர்மா?

ஆஷுதோஷ் ஷர்மா தன்னுடைய சிறிய வயதில் இருந்தே கிரிக்கெட் ஆர்வம் கொண்ட ஒருவராக இருந்து வந்துள்ளார். அவரது தந்தை ராம் பாபு ஷர்மா ஒரு அரசு மருத்துவமனையில் கம்பவுண்டராக பணியாற்றினார். குடும்பம் எளிய பொருளாதார பின்னணியைச் சேர்ந்தது என்றாலும், ஆஷுதோஷின் கிரிக்கெட் மீதான ஆர்வத்தை அவரது தந்தை ஆதரவு கொடுத்து அவருக்கு தேவையான விஷயங்களை செய்து கொடுத்தார்.

அவரது சொந்த ஊரில் போதுமான வாய்ப்புகள் இல்லாததால், கிரிக்கெட் பயிற்சி பெறுவதற்காக இந்தூருக்கு சென்றார். அங்கு அவர் மத்தியப் பிரதேச கிரிக்கெட் சங்கத்தின் (Madhya Pradesh Cricket Association – MPCA) குடியிருப்பு அகாடமியில் சேர்ந்தார். இந்தூருக்கு சென்றபோது ஆஷுதோஷுக்கு வயது வெறும் 8 தான். அவர் முன்னாள் இந்திய வீரர் அமய் குராசியாவின் பயிற்சியின் கீழ் தனது திறமைகளை வளர்த்துக் கொண்டார். ஆனால், அவரது ஆரம்ப காலம் எளிதாக இல்லை. பொருளாதார சிக்கல்கள் காரணமாக, அவருக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய கூட பணம் இல்லை.

சில சமயங்களில் அடுத்த வேளை உணவு எங்கிருந்து வரும் என்று தெரியாத நிலையில் இருந்தார். இதனால், அவர் சிறு வயதிலேயே பணம் சம்பாதிக்க சில வேலைகளை செய்தார். அதில் அம்பயரிங் செய்வதும், மற்றவர்களின் துணிகளை துவைப்பதும் அடங்கும். இந்த கஷ்டங்கள் பொறுத்துக்கொண்டு இருந்த அவருக்கு இந்தூரில் வயது குழு போட்டிகளில் (age-group cricket) போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தபோது அதில் தனது திறமையை காட்டினார்.

அதனை தொடர்ந்து அவர் மத்தியப் பிரதேச அணிக்காக 2017-18 சோனல் டி20 லீக் (Zonal T20 League) போட்டியில் விளையாடினார். இது அவரது டி20 அறிமுகமாகும். பின்னர், 2019 அக்டோபர் 16 அன்று, 2019-20 விஜய் ஹசாரே டிராபியில் மத்தியப் பிரதேச அணிக்காக லிஸ்ட் ஏ (List A) கிரிக்கெட்டில் அறிமுகமானார்.மத்தியப் பிரதேச அணியில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காததால், ஆஷுதோஷ் ரயில்வே அணிக்கு மாறினார். இந்த மாற்றம் அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. ரயில்வே அணியில் அவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்தன, மேலும் அவர் தனது திறமையை முழுமையாக வெளிப்படுத்த முடிந்தது.

இதனை தொடர்ந்து பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) அணி 2024 ஐபிஎல் சீசனில் அவருக்கு விளையாட வாய்ப்புகள் வழங்கியது. அதன்பிறகு தற்போது டெல்லி கேபிடல்ஸ் அணி இவரை 3.8 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. ஏலத்தில் எடுக்கப்பட்ட தொகை பெரியது என ஆரம்பத்தில் விமர்சனங்கள் வந்தாலும் அந்த விமர்சனங்களை நேற்று நடந்த போட்டியின் மூலம் தீர்த்து டெல்லி அணியின் தனக்கான இடத்தை பிடித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்