இந்திய கிரிக்கெட் அணியில் இருந்த சவுரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் மற்றும் லட்சுமணன் ஆகியோர் இந்திய கிரிக்கெட் அணியின் மறக்க முடியாத நான்கு பேர் ஆவார்கள். ஒருநாள் போட்டிகளை காட்டிலும், டெஸ்ட் போட்டிகளில் இந்த நால்வரின் பங்கு அசாத்தியமானது. இந்தியா தோற்று விடும் என்று நினைத்த போதெல்லாம், இந்த கூட்டணி வெற்றியை தேடிக் கொடுத்திருக்கிறது.
இந்நிலையில், இந்த நால்வரும் இணைந்து விளையாடிய காலம் இந்திய கிரிக்கெட் அணியின் பொற்காலம் எனக் கருதலாம். இவர்கள் நால்வரும் இருந்தபோது, இந்த டெஸ்ட் அணி பல வியக்கத்தக்க சாதனைகளைப் படைத்தது எனக் கூறலாம். ரசிகர்கள் எப்போதும் இந்த கூட்டணியை மறக்க மாட்டார்கள்.
இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த சௌரவ் கங்குலி ‘என் வாழ்க்கையின் மிக சிறந்த தருணம். அதன் ஒவ்வொரு நிகழ்வையும் எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்.’ என தெரிவித்துள்ளார். இந்த கூட்டணி ஏறக்குறைய பத்து ஆண்டு காலம் ஒன்றாக கிரிக்கெட் விளையாடி னார்கள்.
இந்த கூட்டணியில் முதலில் ஓய்வுபெற்ற சவுரவ் கங்குலி இப்போது பிசிசிஐ-ன் தலைவராக இருக்கிறார். பின்பு விவிஎஸ் லட்சுமணன் ராகுல் டிராவிட் மற்றும் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றனர்.
இந்த நால்வரின் கூட்டணியில் மிக சிறந்த திறமை என்னவென்றால் உலகின் தலைசிறந்த ஸ்பின்னர்கள் கூட எளிதாக சமாளித்து விடக் கூடியவர்கள். அதே போல இவர்களது காலகட்டத்தில் தான் உலகின் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தார்கள். கங்குலி தலைமையிலான ஒரு நாள் கிரிக்கெட் அணி 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி வரை முன்னேறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
லாகூர் : சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில் நேற்று, ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டி மழை காரணமாக…
மும்பை : மாதந்தோறும் 1ம் தேதி எல்பிஜி சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், இன்று சென்னையில் வணிக…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…