இந்த நால்வரை விட சிறந்த தலைவர் யார்? பொறுத்திருப்போம் – விஸ்டன்

Default Image

இந்திய கிரிக்கெட் அணியில் இருந்த சவுரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் மற்றும் லட்சுமணன் ஆகியோர் இந்திய கிரிக்கெட் அணியின் மறக்க முடியாத நான்கு பேர் ஆவார்கள்.  ஒருநாள் போட்டிகளை காட்டிலும், டெஸ்ட் போட்டிகளில் இந்த நால்வரின் பங்கு அசாத்தியமானது. இந்தியா தோற்று விடும் என்று நினைத்த போதெல்லாம், இந்த கூட்டணி வெற்றியை தேடிக் கொடுத்திருக்கிறது.
இந்நிலையில், இந்த நால்வரும் இணைந்து விளையாடிய காலம் இந்திய கிரிக்கெட் அணியின் பொற்காலம் எனக் கருதலாம். இவர்கள் நால்வரும் இருந்தபோது, இந்த டெஸ்ட் அணி பல வியக்கத்தக்க சாதனைகளைப் படைத்தது எனக் கூறலாம். ரசிகர்கள் எப்போதும் இந்த கூட்டணியை மறக்க மாட்டார்கள்.
கிரிக்கெட்டின் பைபிள் என அழைக்கப்படும் விஸ்டன், தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த நால்வருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, இந்த நால்வரை விட  தலை சிறந்தவர்கள் யார்? பொறுத்திருப்போம் என பதிவிட்டு இருந்தது.
இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த சௌரவ் கங்குலி ‘என் வாழ்க்கையின் மிக சிறந்த தருணம். அதன் ஒவ்வொரு நிகழ்வையும் எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்.’ என தெரிவித்துள்ளார். இந்த கூட்டணி ஏறக்குறைய பத்து ஆண்டு காலம் ஒன்றாக கிரிக்கெட் விளையாடி னார்கள்.
இந்த கூட்டணியில் முதலில் ஓய்வுபெற்ற சவுரவ் கங்குலி இப்போது பிசிசிஐ-ன் தலைவராக இருக்கிறார்.  பின்பு விவிஎஸ் லட்சுமணன் ராகுல் டிராவிட் மற்றும் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றனர்.
இந்த நால்வரின் கூட்டணியில் மிக சிறந்த திறமை என்னவென்றால் உலகின் தலைசிறந்த ஸ்பின்னர்கள் கூட எளிதாக சமாளித்து விடக் கூடியவர்கள். அதே போல இவர்களது காலகட்டத்தில் தான் உலகின் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தார்கள். கங்குலி தலைமையிலான ஒரு நாள் கிரிக்கெட் அணி 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி வரை முன்னேறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்