இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் எந்த அணி வெற்றி பெறும்….கெவின் பீட்டர்சன்.!
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டி வருகின்ற 19 ஆம் தேதி சனிக்கிழமை இரவு 7.30க்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மேலும் ஐபிஎல் போட்டிகனான அட்டவணையையும் அண்மையில் வெளியானது.
இந்நிலையில் மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகாக அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளார்கள் என்றே கூறலாம், முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த இரண்டு அணியும் மோதவுள்ளது.
மேலும் தற்பொழுது இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சனிடம் ரசிகர்கள் ட்வீட்டரில் கலந்துரையாடல் செய்யும் பொழுது ரசிகர் ஒருவர் இந்த வருடம் ஐபிஎல் போட்டியில் எந்த அணி வெற்றி பெரும் என்று கேட்டுள்ளார்.
இந்த வருடம் ஐபிஎல் கோப்பை டெல்லி அணிக்கு கிடைக்க அதிக வாய்ப்பு இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம், ஸ்ரேயஸ் ஐயர் வழிநடத்தும் டெல்லி அணி இதுவரை ஒருமுறை கூட கோப்பை வென்றதில்லை பெங்களூர் பஞ்சாப் அணியில் இந்தப் பட்டியல் உள்ளது.
மேலும் இறுதிப் போட்டி வரை இவ்விரு அணிகளுக்கும் முன்னேற்றம் இருந்தால் கண்டிப்பாக கோப்பையை வெல்ல வாய்பு என்றும் கூறியுள்ளார், மேலும் இந்த வருடம் ரிஷபந்த் ரபாடா, ஸ்ரேயஸ் ஐயர், சிறப்பாக பயிற்சி பெற்று வருகிறார்கள் இதனால் டெல்லி அணி வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக நாங்கள் நினைக்கிறோம் என்று கூறியுள்ளார்.