கோப்பையை வெல்ல போகும் அணி எது? இரு அணிகளின் வெற்றி வியூகம் இதோ!!
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் கொல்கத்தா அணியும், ஹைதராபாத் அணியும் நாளை மோதுகிறது.
நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் கடந்த மார்ச்-22ம் தேதி தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வந்தது தற்போது இறுதி போட்டியை நெருங்கி உள்ளது. 14 அணிகளில் சிறப்பாக விளையாடிய இரு அணிகளான ஹைதராபாத் அணியும், கொல்கத்தா அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதில் ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட சென்னை அணியும், மும்பை அணியும் பிளே-ஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது.
இந்த ஐபிஎல் தொடரில் தற்போது கடைசி போட்டியான இறுதி போட்டியில் கொல்கத்தா அணியும், ஹைதராபாத் அணியும் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் மோதவுள்ளது. இந்த 2 அணிகளும் நடப்பு ஐபிஎல் தொடரில் வலுவான அணியாகவே இருந்திருக்கிறது. இரு அணிகளுமே இந்த தொடரில் 250+ மேற்பட்ட ரன்களை சுலபமாக அடித்துள்ளனர். மேலும், இந்த தொடரில் 2 முறை இரு அணிகளும் நேருக்கு நேர் சந்தித்து உள்ளது.
அதில் ஒரு போட்டி லீக் போட்டி, ஒரு போட்டி குவாலிபயர் -1 போட்டியாகும். இந்த 2 போட்டிகளிலும் கொல்கத்தா அணி வெற்றி பெற்றுள்ளது. மேலும், ஒட்டு மொத்த ஐபிஎல் தொடரில் இந்த இரு அணியினரும் தலா 27 முறை நேருக்கு நேர் மோதிவுள்ளனர். அதில் அதிகபட்சமாக கொல்கத்தா அணி 18 முறை வெற்றி பெற்றுள்ளது. ஹைதராபாத் அணி வெறும் 9 போட்டிகளை மட்டும் தான் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இரு அணிகளின் வெற்றி வியூகம் :
ஹைதராபாத் அணியின் அதிரடி தொடக்க வீரரான டிராவிஸ் ஹெட்டுக்கும், கொல்கத்தா அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க்குக்கும் ஒரு போதும் போட்டியில் ஒத்து வராமலே இருக்கிறது. இடது கை வேக பந்து வீச்சாளருக்கு எதிராக டிராவிஸ் ஹெட் திணறி வருவதால் இந்த போட்டியில் பவர் பிளே முடிவதற்குள் டிராவிஸ் ஹெட்டை ஆட்டமிழக்க செய்ய வேண்டும் என்பதில் கொல்கத்தா அணி கவனம் செலுத்துவார்கள்.
மேலும், அதே போல ஹைதராபாத் அணி வெற்றி பெறுவதற்கு சுனில் நரேன் மற்றும் வருண் சக்கரவர்த்தியின் சூழலை சமாளிக்க வேண்டும். குறிப்பாக ஹைதராபாத் அணியின் அதிரடி ஆட்டக்காரரான கிளாஸ்ஸன், அபிஷேக் சர்மா போன்றவர்கள் இருவரையும் சமாளித்து ஆட வேண்டும். கொல்கத்தா அணியும் நடராஜன், பேட் கம்மின்ஸ், புவனேஸ்வர் குமார் இந்த வேக பந்து வீச்சாளர்களை சமாளிக்க வேண்டும்.
அதே நேரத்தில், நேற்று நடந்த குவாலிபயர்-2 போட்டியில் ஹைதரபாத் அணியின் அபிஷேக் சர்மாவும், ஷாபாஸ் அகமதும் அவர்களது சூழல் பந்து வீச்சில் ராஜஸ்தான் அணியை திணற வைத்தனர். இதனால் போட்டி அதே சேப்பாக்கம் மைதானம் என்பதால் நாளை நடக்கும் போட்டியில் 2 அணிகளுக்கும் சூழல் பந்து வீச்சு சிறப்பாக கைகொடுக்கும் என்று தெரிகிறது.
மேலும், இதற்கு முன் இருக்கும் தரவுகளை வைத்தும் ஒரு இறுதி போட்டியை கணிக்க முடியாது, இறுதி போட்டியில் என்ன வேண்டுமென்றாலும் ஆகலாம் இதனால் நடக்கவிருக்கும் இறுதி போட்டி விறுவிறுப்பாக நடந்தால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது கொண்டாட்டமாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கொல்கத்தா அணி இந்த கோப்பையை வென்றால் அவர்களுக்கு இது 3-வது ஐபிஎல் கோப்பையாகும், அதே போல ஹைதராபாத் வென்றால் அவர்களுக்கு இது 2-வது ஐபிஎல் கோப்பையாகும்.
மழைக்கு வாய்ப்பு ?
இந்த இறுதி போட்டியானது சென்னையில் நடைபெறுவதால், லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஒருவேளை மழை பொழிவு ஏற்பட்டு திட்டமிட பட்ட நேரத்தை தாண்டி மழை பெய்தாலும், ரிசர்வ் நாளான நாளை இந்த போட்டியை நடத்துவார்கள் ஒருவேளை அந்த நாளும் மழையால் இந்த இறுதி போட்டி நடைபெறாமல் போனால் புள்ளிப்பட்டியலின் முன்னிலை அடிப்படியில் கொல்கத்தா அணிக்கு இந்த கோப்பையை வழங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்ப்பார்க்கப்படும் 11 வீரர்கள்
கொல்கத்தா அணி
ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரிங்கு சிங், நிதிஷ் ராணா, ஆண்ட்ரே ரசல், ராமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி.
ஹைதராபாத் அணி
அபிஷேக் சர்மா, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அப்துல் சமத், நிதிஷ் ரெட்டி, ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஜெய்தேவ் உனட்கட், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, நடராஜன்.