முடிஞ்சா மோதி பாருங்க!! ரசிகர்களால் ரோஹித்துக்கு புதிய சாதனை.! என்ன தெரியுமா?
நடப்பு ஐபிஎல் சீசனில் இதுவரை இல்லாத அளவுக்கு மும்பை அணி சார்பாக ரோஹித் சர்மா, முதல் சிக்ஸ் அடித்து ரசிகர்கள் கூட்டத்தினரிடமிருந்து பெரும் ஆரவாரத்தைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளார்.

மும்பை : நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் எளிதாக வென்று, நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் வெற்றியை மும்பை அணி பதிவு செய்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா, 116 ரன்களுக்கே ஆல் அவுட் ஆனது. மும்பையின் அறிமுக வீரர் அஸ்வனி குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதனையடுத்து, எளிய இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி சார்பாக, ரிக்கெல்டன் (62) அதிரடியாக அரைசதம் விளாசினார். இறுதியில், 12.5 ஓவரில் 121 ரன்கள் எடுத்து மும்பை அணி தனது சொந்த மண்ணில் கொல்கத்தாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
போட்டியின் போது மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக களமிறங்கிய ரோகித் சர்மா, 12 பந்துகளில் 13 ரன்கள் எடுத்தார். நடப்பு ஐபிஎல் சீசனில் ரோகித் சர்மா, சென்னை அணிக்கு எதிரான முதல் போட்டியில் டக் அவுட் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் வெறும் 8 ரன்களுக்கும் முதல் ஓவரிலேயே ஆட்டம் இழந்து வெளியேறினார். இதேபோல கடந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளிலும் பெரிதாக ரோகித் சர்மா ரன்கள் அடிக்கவில்லை.
இப்படி இருக்கையில், நேற்றைய ஆட்டத்தின் போது அவர் அடித்த ஒரு சிக்ஸ் ரசிகர்களின் ஆரவாத்தில் மூழ்க அடிக்க செய்துள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை அணிக்கு நேற்று முதல் போட்டி ஆகும். அது மட்டும் இல்லாமல், மும்பை அணியின் பேட்டிங்கில் ரோஹித், முதல் சிக்ஸ் அடித்ததும் ரசிகர்கள் கூட்டத்தினரிடமிருந்து பெரும் ஆரவாரத்தைப் பெற்றுள்ளது.
View this post on Instagram
இதன் மூலம், இந்த சீசனின் ரசிர்கர்களின் (ஷோர் இசை) அதிக சத்தத்திற்கு ஹிட்மேன் தான் முதல் இடத்தில் இருக்கிறார் என்றும், ரசிகர்களின் ஆரவாரம் 129 டெசிபல் சத்தத்துடன் கூடிய உற்சாகக் குரல்களைப் பெற்றுள்ளது என்று ஸ்டார்ஸ் போர்ட்ஸ் இந்தியா தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு, இந்த சீசனில் எந்த அணியின் ரசிகர்கள் இந்த சாதனையை முறியடிக்க முடியும்? என்று குறிப்பிட்டுள்ளது.
என்னதான் தொடர் சோதனையை பெற்றாலும், இந்த சாதனை ரோஹித்தின் புகழையும், ரசிகர்களிடையே அவருக்கு இருக்கும் ஆதரவையும் காட்டுகிறது.
View this post on Instagram