அடுத்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி எங்கே? போட்டியை நடத்தும் நாடு எது? விவரம் இதோ…

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிந்துள்ள நிலையில், அடுத்த சாம்பியன்ஸ் டிராபி எப்போது, ​​எங்கு நடத்தப்படும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

next icc tournament

டெல்லி : மினி உலகக் கோப்பை என்று பிரபலமாக அழைக்கப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இன் இறுதிப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. இந்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி போட்டியை பாகிஸ்தானால் நடத்தப்பட்டது, ஆனால் தொடரில் இருந்து முதல் அணியாக பாகிஸ்தான் வெளியேறியது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி 2025-இன் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. துபாயில் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில், ரோஹித் சர்மாவின் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், சாம்பியன்ஸ் பட்டத்தை 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இறுதியாக 2013ஆம் ஆண்டு எம்.எஸ்.தோனி தலைமையிலான இந்திய அணி வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த முறை ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி 8 வருட நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஏற்பாடு செய்யப்பட்டது. முன்னதாக இந்த ஐசிசி டிராபி 2017 இல் நடைபெற்றது. அப்பொழுது, பாகிஸ்தான் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன்ஸ் டிராபியைக் கைப்பற்றியது.

இப்போது இந்தியா மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில், அடுத்த சாம்பியன்ஸ் டிராபி எப்போது, ​​எங்கு நடத்தப்படும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இப்போது 4 ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்படும். அதாவது, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2029ல் நடைபெறும். அதன்படி, இந்தியா அடுத்த சாம்பியன்ஸ் டிராபியை, அதாவது 2029 சாம்பியன்ஸ் டிராபியை நடத்தும்.

இதனை ஐ.சி.சி கடந்த 2021 ஆம் ஆண்டிலேயே அறிவித்தது குறிப்பிடத்தக்கது. ஐ.சி.சி கோப்பை 2029 ஆம் ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் ஏற்பாடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், பாகிஸ்தான் அணி போட்டியில் பங்கேற்க இந்தியாவுக்கு வருகிறதா அல்லது வேற ஏதேனும் நாடுகளில் அவர்கள் பங்கேற்கும் போட்டிகளை விளையாட போகிறார்களா? என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி

முதல் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி 1998 இல் வங்கதேசத்தில் நடைபெற்றது. இதுவரை நடந்த 9 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில், ஏழு வெவ்வேறு அணிகள் கோப்பையை வென்றுள்ளன. இதில் இந்தியா மிகவும் வெற்றிகரமான அணியாகும். அதாவது மூன்று முறை கோப்பையை வென்றுள்ளது. அதில், ஒரு முறை பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்