ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலககோப்பை போட்டியில் இந்தியா விளையாடி வருகின்ற நிலையில், கிரிக்கெட் வீரர் விராட் கோலி தங்கியுள்ள ஹோட்டல் அறைக்குள் புகுந்து, ஒரு நபர் வீடியோ எடுத்து ‘கிங் கோலியின் அறை’ என தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், அந்த வீடியோவை பார்த்து மிகவும் கோபடமடைந்த விராட் கோலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வீடியோவை வெளியீட்டு ” ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த வீரர்களைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் அவர்களைச் சந்திப்பதில் உற்சாகம் அடைகிறார்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். அதை நான் எப்போதும் பாராட்டுகிறேன்.
ஆனால், இந்த வீடியோ எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. என்னுடைய சொந்த ஹோட்டல் அறையில் எனக்கு ப்ரைவஸி இல்லையென்றால், எனக்கு எங்குதான் தனிப்பட்ட இடம் கிடைக்கும்? ரசிகர்களின் இதுபோன்ற செயல் எனக்கு பிடிக்கவில்லை தயவு செய்து மக்கள் புரிந்துகொள்ளுங்கள், விளையாட்டு வீரர்களை பொழுதுபோக்கிற்கான பொருளாக கருத வேண்டாம்” என கோபத்துடன் பதிவிட்டுள்ளார்.
மேலும், தற்போது இந்திய அணி டி 20 உலகக்கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளிடம் வென்ற பிறகு, நேற்று தென்னாப்ரிக்காவிடம் தோல்வியை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, எந்த…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. சமீபத்தில் கடலூர்…
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…