எனக்கு எங்குதான் ப்ரைவஸி..? லீக்கான ஹோட்டல் அறை வீடியோ.. செம கடுப்பில் விராட் கோலி.!

Default Image

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலககோப்பை போட்டியில் இந்தியா விளையாடி வருகின்ற நிலையில், கிரிக்கெட் வீரர் விராட் கோலி தங்கியுள்ள ஹோட்டல் அறைக்குள் புகுந்து, ஒரு நபர் வீடியோ எடுத்து  ‘கிங் கோலியின் அறை’ என தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், அந்த வீடியோவை பார்த்து மிகவும் கோபடமடைந்த விராட் கோலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வீடியோவை வெளியீட்டு ” ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த வீரர்களைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் அவர்களைச் சந்திப்பதில் உற்சாகம் அடைகிறார்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். அதை நான் எப்போதும் பாராட்டுகிறேன்.

ஆனால், இந்த வீடியோ எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. என்னுடைய சொந்த ஹோட்டல் அறையில் எனக்கு ப்ரைவஸி இல்லையென்றால், எனக்கு எங்குதான் தனிப்பட்ட இடம் கிடைக்கும்? ரசிகர்களின் இதுபோன்ற செயல் எனக்கு பிடிக்கவில்லை  தயவு செய்து மக்கள் புரிந்துகொள்ளுங்கள், விளையாட்டு வீரர்களை பொழுதுபோக்கிற்கான பொருளாக கருத வேண்டாம்” என கோபத்துடன் பதிவிட்டுள்ளார்.

மேலும், தற்போது இந்திய அணி டி 20 உலகக்கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளிடம் வென்ற பிறகு, நேற்று தென்னாப்ரிக்காவிடம் தோல்வியை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by Virat Kohli (@virat.kohli)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்