மகளிர் பிரீமியர் லீக் அட்டவணை வெளியீடு! எப்போது தொடக்கம்?

பிப்ரவரி 14 அன்று தொடங்கும் முதல் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

TATA WPL 2025

டெல்லி: ஐ.பி.எல். பாணியில் நடத்தப்படும் மகளிர் பிரீமியர் லீக் 2025-ன் மூன்றாவது 20 ஓவர் கொண்ட கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 14ம் தேதி முதல் தொடங்குவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) WPL அட்டவணையை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

அதன்படி, 2025 ம் ஆண்டுக்கான மகளிர் பிரீமியர் லீக் போட்டிகள் பரோடா, பெங்களூரு, லக்னோ மற்றும் மும்பை ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. முதல் முறையாக இந்த லீக் நான்கு நகரங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொடரின் இறுதிப் போட்டி மார்ச் 15ம் தேதி மும்பையில் உள்ள பிராபோர்ன் மைதானத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 அணிகள் பங்கேற்கும் நடப்பாண்டு மகளிர் பிரீமியர் லீக்கின் முதல் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. மொத்தம் 22 போட்டிகள் நடைபெறவுள்ளன, ஒரு அணி மொத்தம் எட்டு போட்டிகளில் விளையாடும்.

முந்தைய சீசனை போலவே, ஒவ்வொரு நாளும் ஒரு போட்டி நடைபெறும். அட்டவணையில் முதலிடத்தைப் பிடிக்கும் அணிகள் நேரடியாக இறுதிப் போட்டிக்குள் நுழையும், மேலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடிக்கும் அணிகளும் இறுதிப் போட்டியில் போட்டியிடும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்