டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி எப்போது அறிவிப்பு? யார் யார் இடம்பெற வாய்ப்பு?

india squad

T20 World Cup 2024: டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி மே 1ம் தேதி அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் முடிந்த உடனே அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐசிசியின் டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குகிறது. அதன்படி, ஜூன் 1 முதல் ஜூன் 29 வரை அமெரிக்கா மாற்றும் வெஸ்ட் இண்டீஸில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், 4 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளது.

இந்த சூழலில் இன்னும் ஓரிரு நாட்களுக்குள் டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்றுள்ள அணிகள் தங்களது 15 பேர் கொண்ட வீரர்களை அறிவிக்க வேண்டும் என ஐசிசி அறிவித்திருந்தது. இதனால் ஒவ்வொரு அணியாக தங்களது வீரர்களை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை மே 1ம் தேதி பிசிசிஐ அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில வாரங்களாக உலகக்கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்வதில் பிசிசிஐ தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதனால் எந்த வீரர்கள் அணியில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த சூழலில் அதுதொடர்பான தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. அதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிவம் துபே ஒரு மாற்று வீரராக மட்டுமே அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல் சுப்மன் கில், ரியான் பராக் ஆகியோரும் மாற்று வீரர்களாக தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் குறிப்பாக சஞ்சு சாம்சன் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் ஆகியோர் இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருந்தது.

இவர்கள் தவிர கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, பும்ரா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ரிங்கு சிங், ரவி பிஸ்னாய் ஆகியோரும் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் தான் இந்திய அணியில் யார் யார் இடம்பெற்றுள்ளார்கள் என்பது தெரியவரும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்