#Cricket Update:வெளிநாட்டில் சீமிங் டிராக்குகளில் விளையாடும்போது எங்களுக்கு கசக்கவில்லை -விராட் கோலி

Default Image

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி நாளை நடைபெற உள்ளது.இந்திய கேப்டன் விராட் கோலி இன்று  செய்தியாளர்களை சந்தித்து பேசினார் .

சர்ச்சையும் விராட்கோலி பதிலும் :

ind vs eng 3rd test

அகமதாபாத்தில் இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்டில் ஆடுகளம் இரண்டு நாட்களுக்குள் பகல்-இரவு போட்டி முடிந்ததும் ஒரு முக்கிய பேசும் பொருளாக மாறியது.

இது பற்றி விராட் கோலி கூறுகையில் ,நானும் எனது அணியும் வெற்றிபெற விளையாடுவதால்,இந்த மாதிரியான சலுகைகள் குறித்த கேள்விகளுக்கு எந்த விளக்கமும் அளிக்க மாட்டேன் என்று கூறினார்.

நீங்கள் எப்படி விளையாடுகிறீர்கள் ?

ind vs eng

மேலும் அவர் கூறுகையில் ,நீங்கள் வெற்றிபெற விளையாடுகிறீர்களா அல்லது ஆட்டத்தை ஐந்து நாட்களுக்கு எடுத்துச் செல்கிறீர்களா?”  “நாங்கள் வெற்றி பெற விளையாடுகிறோம்.இந்தியா வெற்றிபெறும் போது மக்கள் ரசிக்க வேண்டும், எத்தனை நாட்களில் போட்டி முடிந்தாலும் பரவாயில்லை என்றார் .”

நீங்கள் 4 அல்லது 5 ஆம் நாட்களில் வென்றால், யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள், ஆனால் அது இரண்டு நாட்களில் முடிந்தால், எல்லோரும் அதை விமர்சிக்க தொடங்கிவிடுகின்றனர் என்று கூறினார்.

எங்களுக்கு கசக்கவில்லை:

virat kohli

“நியூசிலாந்தில் நாங்கள் மூன்று நாட்களில் தோற்றபோது எங்கள் மக்கள் கூட ஆடுகளத்தைப் பற்றி எதுவும் எழுதவில்லை என்று நான் நம்புகிறேன்,”பேட்ஸ்மேன்களின் திறமையை ஆட்டத்தில் நிலவும் நிலைமையை விட மேலாக பார்க்க வேண்டும் என்றும், மேலும் வெளிநாட்டில் சீமிங் டிராக்குகளில் விளையாடும்போது தனது அணிக்கு ஒருபோதும் அது கசக்கவில்லை என்று கூறினார்.

இந்தியா தற்போது தொடரை 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நான்காவது டெஸ்ட் வியாழக்கிழமை தொடங்க உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live 20032025
Suburban trains
TN Driver Conductor
Chidambaram - Gun Shot
trump zelensky phone call
modi bill gates
mk stalin and annamalai