தோனியிடம், எப்போது ஓய்வு என்று பல வருடங்களாக கேட்கப்படும் கேள்விகளும் அவரது ஜாலியான பதில்களும் இங்கே பார்க்கலாம்…
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன் என்றால் அது மகேந்திர சிங் தோனி தான். இந்தியாவின் 28 வருட உலகக்கோப்பை கனவை நனவாக்கிய தோனி, தான் இளம் வயதில் பொறுப்பேற்ற கேப்டன் பதவிக்கு பரிசாக 2007 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட முதல் டி-20 உலகக்கோப்பையை பெற்றுத்தந்தார்.
இந்திய அணியை பல சரித்திர சாதனையை படைக்க வைத்த கேப்டன் தோனி, இந்திய அணிக்கு இளம் வீரர்களை வைத்துக்கொண்டு சாம்பியன்ஸ் ட்ராபியையும் 2013 ஆம் ஆண்டு வெல்ல உறுதுணையாக இருந்தார். தோனி கடந்த 2014 ஆம் ஆண்டு இறுதியில் டெஸ்ட் போட்டியில் இருந்து தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.
அதன்பிறகு 2015 ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில், இந்தியா அரையிறுதி வரை முன்னேறி, வெளியேறியது. அன்று தொடர்ந்து தோனி எப்போது கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவார் என்ற கேள்வி நிலவி வருகிறது. 2016 ஆம் ஆண்டு வெளிநாட்டு பத்திரிகையாளர் ஒருவர், தோனியிடம் ஓய்வு குறித்து கேட்ட போது அவரிடம் தோனி நடத்திய கலந்துரையாடல் பெரிதும் ரசிக்கப்பட்டது.
2016:
நான் உடற்தகுதியுடன் இல்லை என்று நீங்கள் நினைக்கிறீர்களா, என்னால் ஓட முடியவில்லை என உணர்கிறீர்களா, 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை வரை என்னால் விளையாட முடியாதா? என பத்திரிகையாளரிடம் தோனி கேட்பார், அதற்கு அவர் இல்லை என்று கூறுவார், உடனே தோனி அப்போ உங்களிடம் பதில் இருக்கிறது என்று ஜாலியாக பதில் கூறுவார்.
2017இல் கேப்டன் பதவி விலகல்:
இதையடுத்து 2017 ஆம் ஆண்டில் கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகினார், அணியில் வீரராக தொடர்வதாக அறிவித்தார். விராட் கோலி கேப்டனாக மூன்று வித கிரிக்கெட்டிலும் தொடர்ந்தார். 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் இந்தியா அரையிறுதியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியுற்று வெளியேறியது.
2019:
இதேபோல் 2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில், தோனியிடம் நீங்கள் தொடர்ந்து அடுத்தவருடம் விளையாடுவீர்களா எனக் கேட்கப்பட்டபோது, அவர் நம்பிக்கையுடன் ஆம் என்று கூறுவார். அதன்பின் அடுத்தவருடம் பேரதிர்ச்சி காத்திருந்தது.
2020 இல் ஓய்வு:
2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தோல்விக்கு பிறகு தோனி, இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து தனது ஓய்வு முடிவை 2020இல் அறிவித்தார். தோனியின் கடைசி போட்டியாக, உலகக்கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக அமைந்தது. தோனியின் ஓய்வு முடிவுக்கு பிறகு ரசிகர்கள் பெரிதும் அதிர்ச்சி மற்றும் வேதனை அடைந்தனர்.
2020:
தொடர்ந்து தோனியிடம் விடாமல் துரத்தி 2020 ஆம் ஆண்டும் ஓய்வு பற்றி கேட்கப்பட்டது. அதற்கு தோனி நிச்சயமாக இல்லை. நான் தொடர்ந்து விளையாடுவேன் என கூறியிருப்பார். 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் கொரோனா தொற்று காரணமாக அரபு நாடுகளில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
2021:
2021 ஆம் வருடம் ஐபிஎல் தொடர் கொரோனா பரவல் காரணமாக இரு பகுதிகளாக இந்தியாவிலும், அரபு நாடுகளிலும் நடத்தப்பட்டது. இந்த வருடம் தோனி தலைமையில் சிஎஸ்கே சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. இந்த தொடரின் போதும் வழக்கமான கேள்வியான, ஓய்வு முடிவை எப்போது கூறுவீர்கள் என்பது போல் தோனியிடம் கேட்கப்பட்டது.
அப்போது தோனி, இன்னும் என்னிடம் கிரிக்கெட் விளையாட திறன் இருக்கிறது, நான் விளையாட வேண்டியது இன்னும் மீதம் இருக்கிறது என்று கூறுவார். அவர் கூறிய வீடியோ இந்த லிங்கில் https://www.iplt20.com/video/247430/i-still-havent-left-behind-ms-dhoni?tagNames=indian-premier-league .
2022:
சென்னை அணி தோனியின் தலைமையில் 4 முறை கோப்பைகளை வென்றுள்ளது. இருந்தும் வருங்கால சென்னை அணியின் நலன் குறித்து, அதாவது தோனிக்கு பிறகு அணியை வழிநடத்துவதற்கு திறமையான வீரரை தேர்வு செய்வதற்காக தோனி, மிகப்பெரிய முடிவை அறிவித்தார். தோனி கேப்டன் பதவியிலிருந்து விலகினார், ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
ஜடேஜா தலைமையில் சென்னை அணி தடுமாறியதால், அவர் கேப்டன் பதவியை மீண்டும் தோனிக்கே கொடுத்துவிட்டார். இந்த வருடமும் தோனியிடம் அதே ஓய்வு முடிவு குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த தோனி, சென்னையில் ரசிகர்கள் முன்னிலையில் அவர்களுக்கு நன்றி கூறிவிட்டு தான் என் ஓய்வு முடிவை அறிவிப்பேன் என கூறினார்.
2023:
16-வது ஐபிஎல் சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. சென்னை அணி 10-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த வருடமும் தோனியிடம் வர்ணனையாளர் ஒருவர், நீங்கள் உங்களது கடைசி ஐபிஎல் தொடரில் மகிழ்ச்சியாக விளையாடுகிறீர்களா என கேட்டார்.
அதற்கு தோனி, நீங்கள் தான் அப்படி முடிவு செய்தீர்கள் நான் இன்னும் ஓய்வு பற்றி முடிவு செய்யவில்லை என தெரிவித்திருந்தார்.
மீண்டும் அதே கேள்வியுடன் ஹர்ஷா போகலே, தோனியிடம் நீங்கள் மீண்டும் அடுத்த ஆண்டும் விளையாடுவீர்களா எனக் கேட்டார். அதற்கு பதிலளித்த தோனி, அதைப் பற்றி சிந்திக்க இன்னும் 8,9 மாதங்கள் இருக்கின்றன. இதற்கிடையில் மினி ஏலம் நடைபெற உள்ளது, இப்போதைக்கு எதையும் யோசித்துக்கொண்டு வீணாக தலைவலி உண்டாக்க விரும்பவில்லை என நினைக்கிறன் என்று கூறினார்.
இதன்மூலம் அடுத்தவருடம் தோனி விளையாடுவதும், ஓய்வு முடிவை அறிவிப்பதும் இந்த ஐபிஎல் தொடர் முடிவில் தெரியவரும். சென்னை அணிக்கு ஐபிஎல் கோப்பையை பெற்றுக் கொடுத்துவிட்டு வெற்றியுடன் ஓய்வு முடிவை அறிவிப்பாரா? அல்லது தொடர்ந்து விளையாடுவாரா? என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. ஆனால் ரசிகர்கள் தோனியை அடுத்தவருடமும் விளையாட வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…