Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர்.
வருகிற ஜூன்-1 ம் தேதி முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் தொடங்கவிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் . இந்த தொடரில் தகுதி அடைந்துள்ள அணிகள் தங்களது அணி வீரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஏப்ரல்-30 ம் தேதி அன்று பிசிசிஐ 15 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்தது. இதனால் பலவித கருத்துக்களை ரசிகர்கள் பகிர்ந்து வந்தனர்.
இதை தொடர்ந்து இந்திய அணியை அறிவித்த பிறகு, அந்த இந்திய அணியில் இடம்பெற்றுள்ள முக்கிய வீரர்களாக பார்க்கப்படும் வீரர்கள் ஐபிஎல் தொடரில் சொதப்பி வருகிறார்கள், இதனால் ரசிகர்கள் சற்று கவலையில் இருந்து வருகின்றனர். கடந்த ஏப்ரல்-30 தேதி, அதாவது நேற்று முன்தினம் இந்திய அணியை அறிவித்த அன்று ஐபிஎல் தொடரின் இரவு போட்டியாக மும்பை அணியும், லக்னோ அணியும் மோதியது.
இந்த போட்டியில் மும்பை அணியில் உள்ள இந்தியா அணியின் முக்கிய வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா, துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் சூரியகுமார் யாதவ் இந்த 3 வீரர்களும் இந்திய அணியில் இடம்பெற்றவர்கள் தான். ஆனால் பிசிசிஐ அணியை அறிவித்த பிறகு இந்த 3 வீரர்களும் அன்றைய போட்டியில் 10 ரன்களை கூட தாண்டாமல் ஆட்டமிழந்து சொதப்பினார்கள். மேலும், ஹர்திக் பாண்டியா பவுலிங்கில் மட்டும் சற்று சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.
அதே நேரம் நேற்றைய சென்னை, பஞ்சாப் போட்டியை பார்க்கையில், அங்கும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா மற்றும் பஞ்சாப் அணியில் உள்ள அர்ஷிதீப் சிங் என இந்த 3 வீரர்களும் நேற்றைய போட்டியில் சொதப்பினார்கள். அதே போல் சிவம் துபே 1 ஓவர் பந்து வீசி அதில் 1 முக்கிய விக்கெட்டையும் எடுத்துள்ளார். ஆனால் நேற்றைய போட்டியில் இவர் ரன்ஸ் எதுவும் எடுக்காமல் டக்-அவுட் ஆகி வெளியேறினார்.
இதனால் ரசிகர்கள் இந்த 6 வீரர்களையும் சுட்டி காட்டி, ” என்னதான் ஆச்சு ? இந்திய அணியில் இடம்பெற்ற பிறகு ஏன் இப்படி மோசமாக விளையாடுகிறீர்கள்” என்று சமூகவலைதளங்களில் அவரகளது கருத்தை வருத்ததுடன் பகிர்ந்து வருகின்றனர். ஏற்கனவே, ஐபிஎல் தொடரில் நன்றாக விளையாடி கொண்டிருக்கும் வீரர்களுக்கு வாய்ப்பளிக்காமல், விளையாடாமல் இருக்கும் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்ததற்கு ரசிகர்கள் பிசிசிஐ இப்பொது வரை கேள்வி எழுப்பி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும்,…