கொரோனா காரணமாக ஐபிஎல் 2020 ரத்தானால் தோனிக்கு என்ன நடக்கும்? பதிலளித்த ஆகாஷ் சோப்ரா!

Published by
Surya

கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மார்ச் 29ஆம் தேதி தொடங்கயிருந்த ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15ஆம் தேதிக்கு தள்ளிக்கிவைக்கப்பட்டது. மேலும், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தையும் மார்ச் 31ஆம் தேதி வரை பிசிசிஐ ரத்து செய்தது. இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேனான ஆகாஷ் சோப்ராவிடம் யூடுப் சேனல் ஒன்று “கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் 2020 தொடர் ரத்து செய்யப்பட்டால் எம்.எஸ் தோனிக்கு பாதிப்பு எப்படி இருக்கும்” என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், தோனி போன்ற வீரரை பொறுத்தவரை ஐபிஎல் போட்டிகள் ஒரு விஷயமே இல்லை என்றும் இந்த ஐபிஎல்லில் தோனி சிறப்பாக விளையாடினால் அனைவரின் பார்வை அவர்மீது விழும் என்று தெரிவித்தார். மேலும் தோனி என்ன செய்கிறார் என்று அவருக்கு தெரியும் என ஆகாஷ் சோப்ரா கூறினார். இதையடுத்து தோனி இந்திய அணிக்கு மீண்டும் விளையாடுவாரா இல்லையா என ஆகாஷ் சோப்ராவிடம் கேள்வி எழுப்பினர்.

Image result for aakash chopra

அதற்கு பதிலளித்த அவர், தோனி அனுபவம் மற்றும் திறமை வாய்ந்த வீரர் என்றும் இந்திய அணிக்கு தேவைப்பட்டால் ஐ.பி.எல் போட்டி மூலமாக அல்லது இல்லாமல் அவர் திரும்பி வருவார் என தெரிவித்தார். பின்னர் 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக் கோப்பை அரையிறுதி போட்டிக்கு பிறகு தோனி எந்தவொரு கிரிக்கெட் தொடரிலும் விளையாடவில்லை என குறிப்பிட்டார். இந்த 2020 ஐ.பி.எல் தொடர் தோனிக்கு ஒரு முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது என்று கூறினார்.

இந்நிலையில், மார்ச் 2ம் தேதி சென்னை சென்ற தோனி, சி.எஸ்.கே அணிக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டார் என்றும் அந்த பயிற்சி ஆட்டத்தில் 5 பந்துகளுக்கு 5 சிக்ஸர் அடித்து ரசிகர்களுக்கு நல்ல விருந்தை கொடுத்தார். மேலும் தோனியை பார்ப்பதற்காகவே ஏராளமான ரசிகர்கள் மைதானத்தில் குவிந்தனர். சர்வதேச கிரிக்கெட்டில் தனது எதிர்காலம் குறித்து அவர் இறுக்கமாக இருந்தபோதிலும், இந்த இந்த ஐபிஎல் மூலம் அவரின் உடல்தகுதியை பூர்த்திசெய்தால் மட்டுமே அவரை மீண்டும் இந்திய அணிக்கு கொண்டு வர முடியும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளனர்.

இந்த ஐபிஎல்-லில் அவர் நன்றாக ஆடினால் மட்டுமே அவர் மீண்டும் இந்திய அணிக்கு வருவார். இது அவருக்கு மட்டுமல்ல அனைத்து மூத்த மற்றும் இளம் வீரர்களுக்கும் இத்தொடர் ஒரு முக்கியமானதாக இருக்கும் என்றும் அதில் சில புதிய வீரர்களை நீங்கள் காணலாம் என பி.சி.சி.ஐ.யின் மூத்த வட்டாரம் ஒருவர் பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவிடம் தெரிவித்துள்ளார். 

Published by
Surya

Recent Posts

தவெக சிறப்பு ஆலோசகர் ஆகிறாரா பிரசாந்த் கிஷோர்? விஜய்யுடன் 2.30 மணி நேரம் சந்திப்பு!

சென்னை : தமிழகம் வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்து தற்போது வரையில் அக்கட்சி நிர்வாகத்திற்கு 120 மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்…

36 minutes ago

கலகலன்னு கலக்கும் ப்ரதீப் ரங்கநாதனின் ‘ட்ராகன்’ ட்ரெய்லர்.!

சென்னை : இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'ட்ராகன்' படத்தின் டிரெய்லர் வெளியானது. இப்படத்தில் கயாடு…

1 hour ago

NZ vs SA : சதமடித்து எதிரணியை மிரளவிட்ட கேன் மாம்ஸ்… நியூசிலாந்து அணி திரில் வெற்றி.!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடர் இப்பொது பரபரப்பான கட்டத்தில் உள்ளது.…

2 hours ago

2வது ஒருநாள் போட்டியில் லைட் எரியாததால் வெடித்தது பிரச்சனை! OCA-வுக்கு நோட்டீஸ் அனுப்பிய ஒடிசா அரசு.!

ஒடிசா : இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியின் போ, ஏற்பட்ட ஃப்ளட்லைட் பிரச்சனை தொடர்பாக ஒடிசா அரசு…

3 hours ago

கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள்!

மதுரை : மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரையில் உள்ள அரசு நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் நாளை…

3 hours ago

முதல்ல ஏ.ஆர்.ரஹ்மான்..இப்போ அனிருத்…தொடர்ந்து பெரிய படங்கள் வாய்ப்பை தூக்கிய சாய் அபியங்கர்!

சென்னை : ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்து கலக்கி கொண்டு இருந்த பாடகர் திப்புவின் மகனான சாய் அபியங்கர் காட்டில் மழை…

4 hours ago