இப்படியா விளையாடுவது? சூர்யகுமார் யாதவை விமர்சித்த மைக்கேல் வாகன்!
சூர்யகுமார் யாதவ் எல்லா பந்துகளையும் அடிக்க முற்படுகிறார். அவர் நிதானித்து விளையாட வேண்டும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.

குஜராத் : டி20 கிரிக்கெட்டில் நம்பர் 1 கிரிக்கெட் வீரர் என்று அழைக்கப்படும் கேப்டன் சூர்யகுமாரின் பேட்டிங் பார்ம் சமீபகாலமாக மோசமாக இருந்து வருகிறது. டி20 கிரிக்கெட் என்றாலே சூரியகுமார் யாதவின் பேட்டிங் ருத்ர தாண்டவமாக இருக்கும். ஆனால், இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இதுவரை நடந்து முடிந்த 3 போட்டிகளிலும் அவர் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
குறிப்பாக, முதல் போட்டியில் டக் அவுட் ஆனார். இரண்டாவது போட்டியில் 12 ரன்கள் மட்டுமே அவரால் அடிக்க முடிந்தது. அடுத்ததாக மூன்றாவது போட்டியில் விளையாடி கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில். மூன்றாவது போட்டியிலும் மோசமாக விளையாடி 14 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
இந்த சூழலில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவின் பேட்டிங் அணுகுமுறையை விமர்சித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” எப்போதும் ஆக்ரோஷமாக இருங்கள் என்று கூறும்போது, அது சரியான பந்துகளைத் தேர்ந்தெடுத்து ஆக்ரோஷமாக விளையாடுவதை குறிக்கிறது. ஒவ்வொரு பந்தையும் எல்லைக்கு அடிக்க முடியாது.
எந்தெந்த பந்துகளை தேர்வு செய்து எப்படி அடிக்கலாம் என்பது பேட்ஸ்மேன்களுக்கு தான் தெரிய வேண்டும். இந்திய அணி உலக சாம்பியனாக இருக்க, அவர்களின் சிறந்த வீரர்கள் நல்ல ஃபார்மில் இருக்க வேண்டும் என்பது முக்கியமான ஒன்று. வீரர்கள் நல்ல ஃபார்முக்கு வருவதற்கான ஒரே வழி, நடுவில் அதிக நேரத்தை செலவிடுவதுதான். சூர்யகுமார் சில நல்ல ஷாட்களை விளையாடி, விரைவில் வெளியேறுகிறார்.
அவருடைய பேட்டிங் சரியாக தான் இருக்கிறது. ஆனால் எந்த பந்தை அடிக்கலாம் என்பதில் தான் சற்று குழம்புகிறார். எப்போது ஆக்ரோஷமாக விளையாடாமல் எப்போதாவது நிதானமான ஆட்டத்தை மிதமாக்கி, ஐந்தாவது கியரில் இருந்து மூன்றாவது கியருக்கு மாற்ற வேண்டிய நேரத்தை கொண்டு வரவேண்டும். அதனைவிட்டு விட்டு எப்போதும் இப்படியா விளையாடுவது? ” எனவும் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025