என்னதான் ஆச்சு இவருக்கு? ரோஹித் ஷர்மாவின் மோசமான சாதனை!!

Rohit Sharma Worst Record

ரோஹித் ஷர்மா: இந்த ஆண்டில் கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொடர்களில் நடைபெற்று வரும் உலகக்கோப்பையும் ஒன்று. இந்த தொடரில் தற்போது லீக் போட்டிகள் முடிவடைந்து சூப்பர் 8 சுற்று தொடங்கி அமோகமாக நடைபெற்று வருகிறது.

இதில் இந்திய அணி சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றார்கள். இந்நிலையில், இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் சற்று தோய்வாகவே இருந்து வருகிறது.

இந்த தொடரில் தற்போது வரை 4 போட்டிகளை மட்டும் விளையாடிய இவர் அதில் ஒரு அரை சதம் மட்டுமே பதிவு செய்துள்ளார். அதையும் அயர்லாந்து அணியுடன் மட்டுமே அந்த அரை சதத்தை பதிவு செய்துள்ளார்.

மேலும், பாகிஸ்தான் அணியுடன் 13 ரன்களும், அமெரிக்கா அணியுடன் 3 ரன்களும், ஆப்கானிஸ்தான் அணியுடன் 8 ரன்களும் பதிவு செய்துள்ளார். இதன் மூலம் தற்போது ரோஹித் சர்மா ஐசிசி தொடரில் மோசமான சாதனையை படைத்துள்ளார்.

அது என்னவென்றால் அதிக முறை ஒற்றை இலக்கு (Single Digit) ரன்களில் ஆட்டமிழந்த இந்திய வீரர் என்ற மோசமான சாதனை தான் அது. ஐசிசி தொடர்களில் இதுவரை ரோஹித் சர்மா 19 முறை ஒற்றை இலக்கு ரன்களில் ஆட்டமிழந்து இருக்கிறார்.

அவருக்கு பின் இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் யுவராஜ் சிங் (17) இருந்து வருகிறார். அதன் பின் விராட் கோலி 14 முறையும், 4-வது இடத்தில் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னாவும் 13 முறையும், அதன் பின் 5-வது இடத்தில் சச்சின் 12 முறையும் ஒற்றை இலக்கு ரன்களில் ஆட்டமிழந்துள்ளனர்.

இவரது இந்த ஃபார்ம் இந்திய அணிக்கு அடுத்தடுத்து வரும் முக்கிய போட்டிகளில் பெரிய இழப்பாக மாறிவிடும் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் அவரது ரசிகர்கள் அவருக்கு உறுதுணையாக ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
kkr vs rcb
Murder
331 apps removed from Google Play store
TN CM MK Stalin say about Fair Delimitation
Gold Price in tamilnadu
allahabad high court