என்ன முடிவு இது? தோல்விக்கு இது தான் காரணம்! கொந்தளிக்கும் மும்பை ரசிகர்கள்!
மகளிர் பிரிமியர் லீக் (WPL) 2025 தொடரில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் மோதிக்கொண்ட போட்டி பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது.

குஜராத் : மகளிர் பிரிமியர் லீக் (WPL) 2025 சீசன் தற்போது விறு விறுப்பாக நடைபெற்றுகொண்டு இருக்கிறது. இந்த தொடரில் நேற்று (பிப்ரவரி 16) வதோதராவில் உள்ள கோடாம்பி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி டெல்லி கேபிடல்ஸ் மகளிர் அணி மோதியது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பந்துவீச தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 19.1 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் சரியாக எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்த போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றிபெற்றாலும் பெரிய சர்ச்சையை எழுந்துள்ளது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் கடைசி பந்தில் ரன்-அவுட் ஆன விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. கடைசியாக 1 பந்துகளில் டெல்லி அணிக்கு வெற்றிக்காக 2 ரன்கள் தேவை பட்டது. அப்போது, மும்பை அணியின் சஜனா வீசிய பந்தை அருந்ததி ரெட்டி அடித்து, இரண்டாவது ரன் எடுக்க முயன்றார்.
அப்போது, மும்பை கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் துல்லியமாக செயல்பட்டு பந்தை ரன் அவுட் செய்வதற்காக விக்கெட் கீப்பர் யஸ்திகா பாட்டியாவிடம் வீசினார். எனவே, அருந்ததி ரெட்டி கிரீஸை எட்டுவதற்கு முன்பே விக்கெட் கீப்பர் யஸ்திகா பெயில்ஸில் அடித்தார். இதனால், மின்விளக்குகளும் எரிந்தது. அப்படி எரிந்தால் அதனுடைய அடிப்படையாக கொண்டு ரன்-அவுட் எனக் கணிக்கலாம் என்ற சர்வதேச விதி இருக்கிறது. ஆனால், போட்டியின் நடுவர் பெயில்ஸ் முழுவதுமாக எரிந்ததா என்பதை வைத்து முடிவு செய்தார் – இதனால், அருந்ததி ரெட்டி நாட்டெளிவாக (Not Out) அறிவிக்கப்பட்டார்.
நடுவரின் இந்த முடிவால் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் இது தான் தோல்விக்கு காரணம் என பேசி வருகிறார்கள். பல கிரிக்கெட் விமர்சகர்கள், “அம்பையர்கள் சர்வதேச விதிகளை முழுமையாக பின்பற்றவில்லை” எனக் கூறி வருகிறார்கள்.