என்னடா இது மேட்சு? 19 பந்தில் போட்டியை முடித்த இங்கிலாந்து!!

Published by
அகில் R

டி20I: டி20 கிரிக்கெட் போட்டி வரலாற்றில் புதிய சாதனையாக, இங்கிலாந்து அணி 19 பந்துகளில் ஒரு போட்டியை வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டு நடைபெற்று கொண்டிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் இன்றைய மற்றொரு போட்டியாக தொடரின் 28-வது போட்டியாக இங்கிலாந்து அணியும், ஓமான் அணியும் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி பேட்டிங் களமிறங்கிய ஓமான் அணி மிக மோசமான விளையாட்டை வெளிப்படுத்தியது. கிரிக்கெட்டில் நடந்து முடிந்த போட்டிகளின் ஹைலைட்ஸ் பார்ப்பது போல ஓமான் அணியின் பேட்டிங் அமைந்திருந்தது. அந்த அளவிற்கு அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து கொண்டே இருந்தது ஓமான் அணி.

இதன் மூலம் 13.2 ஓவர்களில் 47 ரன்களை மட்டுமே எடுத்து பரிதாபமான நிலையில் இருந்தது ஓமான் அணி. இங்கிலாந்து அணியில் ஜோஃப்ரா ஆர்ச்சர், மார்க் வுட் இருவரும் தலா 3 விக்கெட்டுகளும், அடல் ரஷீத் 4 விக்கெட்டையும் கைப்பற்றி இருந்தனர்.

அதனை தொடர்ந்து பேட்டிங் களமிறங்கிய இங்கிலாந்து அணி, இந்த எளிய ஸ்கோரை முடிந்த அளவிற்கு வேகமாக அடிக்க வேண்டுமென தொடக்கத்தில் இருந்து எல்லா பந்துகளையும் பவுண்டரிகள் அடிக்க முயற்சித்தனர். அதிலும் ஜோஸ் பட்லர் 8 பந்துக்கு 24 ரன்கள் நடித்திருந்தார்.

வெறும் 3.1 ஓவர்களில் அதாவது வெறும் 19 பந்துகளிலேயே 2 விக்கெட்டை இழந்து 50 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில்  போட்டியில் வெற்றி பெற்றனர். இந்த போட்டியில் வெற்றி பெற்றதோடு, இந்த போட்டியை பயன்படுத்தி புள்ளிபட்டியலில் ரன் ரேட்டை உயர்த்தியுள்ளனர்.

இதனால் இங்கிலாந்து அணி அடுத்த போட்டியில் வெற்றி பெற்று ஸ்காட்லாந்து அணி அடுத்த போட்டியில் தோல்வி பெற்றால் இங்கிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த வெற்றியின் மூலம் டி20 உலகக்கோப்பை தொடரில்,  வெறும் 20 பந்துகளுக்குள் ஒரு போட்டியில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி புதிய சாதனையை படைத்துள்ளது.

Published by
அகில் R

Recent Posts

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

2 hours ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

4 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

5 hours ago

புஷ்பா 2 வெளியீடு: நெரிசலில் சிக்கிய சிறுவன் மூளைச் சாவு… தாயை தொடர்ந்து மகனும் உயிரிழந்த சோகம்!

ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…

6 hours ago

“அம்பேத்கர்… அம்பேத்கர்…” அமித்ஷாவை வன்மையாக கண்டிக்கிறேன் – கொந்தளித்த விஜய்!

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…

7 hours ago

இன்றும், நாளையும் 4 மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் – டெல்டா வெதர்மேன்.!

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…

7 hours ago