சென்னை அணிக்காக களமிறங்கிய ‘பேபி ஏபி’.! CSK-வில் பிரெவிஸ் இணைந்த காரணம் என்ன?

தமிழக வீரர் குர்ஜப்னீத் சிங் காயம் காரணமாக விலகிய நிலையில், அவருக்குப் பதிலாக டெவால்ட் பிரெவிஸை ஒப்பந்தம் சிஎஸ்கே நிர்வாகம் செய்துள்ளது.

DewaldBrevis

சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள தமிழக வீரரான குர்ஜப்னீத் சிங் காயம் காரணமாக ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில், மாற்று வீரராக தென்னாப்பிரிக்காவின் டெவால்ட் பிரெவிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சென்னை அணி அவரை 2.2 கோடிக்கு வாங்கியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடப்பு சீசனில் தடுமாறி வரும் சென்னை அணிக்கு பிரேவிஸ் வலு சேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸுக்கு நடப்பு சீசன் தடுமாற்றமாக உள்ளது. இதுவரை சென்னை அணி விளையாடிய 7 போட்டிகளில் 5 போட்டிகளில் தோல்வியடைந்து 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

இதன் காரணமாக, சிஎஸ்கே அணி புள்ளிகள் பட்டியலில் 10வது இடத்தில் கடைசி இடத்தில் உள்ளது. ஏற்கனவே, ரிதுராஜ் கெய்க்வாட் காயமடைந்த பிறகு, கேப்டனாக தோனி களமிறங்கினார். இருப்பினும் தோனி தலைமையின் கீழ் கூட, அணியின் செயல்பாடு பெரிதும் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இந்த சூழ்நிலையில், இப்போது அணியில் அதிரடி பேட்ஸ்மேன் டெவால்ட் பிரெவிஸை சென்னை ஒப்பந்தம் செய்துள்ளது. டெவால்ட் ப்ரீவிஸ், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 21 வயது இளம் பேடஸ்மேன் ஆவார். இவர் தனது அதிரடி பேட்டிங் மற்றும் ஆக்ரோஷமான ஆட்டத்திற்கு பெயர் பெற்றவர். இவர், ஏபி டிவில்லியர்ஸ் போல விளையாடுவதால் இவரை பேபி ஏபி என செல்லமாக அழைக்கின்றனர்.

டெவால்ட் பிரெவிஸ்

டெவால்ட் பிரெவிஸ் இதுரை 81 டி20 போட்டிகளில் விளையாடி 1787 ரன்கள் எடுத்துள்ளார், அதிகபட்சமாக 162 ரன்கள் எடுத்துள்ளார். 2023 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்காக டி20யில் அறிமுகமான அவர் இதுவரை 2 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். பிரெவிஸ் முன்பு மும்பை இந்தியன்ஸ் (MI) அணியில் இருந்தார், அங்கு அவர் 10 போட்டிகளில் விளையாடினார்.

ஆம், ஐபிஎல் 2022 மற்றும் 2023 சீசன்களில் மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்காக விளையாடிய ப்ரீவிஸ், 7 போட்டிகளில் 161 ரன்கள் எடுத்துள்ளார், இதில் ஒரு அரைசதமும் அடங்கும். அவரது ஸ்ட்ரைக் ரேட் 140-ஐ தாண்டுவது அவரது அதிரடி திறனை வெளிப்படுத்துகிறது.

பிரெவிஸ் அணியில் சேர்க்கப்பட்ட காரணம்

சிஎஸ்கே பந்து வீச்சாளருக்கு பதிலாக ஒரு பேட்ஸ்மேனை தேர்வு செய்து, தங்கள் பேட்டிங் வரிசையை பலப்படுத்த முடிவு செய்தது. சிஎஸ்கே அணியில் ஏற்கனவே ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, ரச்சின் ரவீந்திரன் போன்ற வலுவான பேட்ஸ்மேன்கள் இருந்தாலும், மிடில் ஆர்டரில் ஒரு அதிரடி பேட்ஸ்மேனின் தேவை இருந்தது. ப்ரீவிஸின் அதிரடி ஆட்டம், இந்த இடத்தை நிரப்புவதற்கு ஏற்ற நபராக இருப்பதால் இவரை அணியில் இணைந்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்