DC vs LSG: லக்னோ அணியில் இடம்பெறாத கே.எல்.ராகுல்… ஓஹோ இது தான் விஷயமா.!
தனிப்பட்ட காரணங்களுக்காக லக்னோ அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் அதிரடி ஆட்டக்காரர் கே.எல். ராகுல் விளையாடவில்லை.

விசாகப்பட்டினம் : ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பு டெல்லி அணியின் கேப்டனாக செயல்படுவார் என கணிக்கப்பட்ட கே.எல்.ராகுல், இன்றைய முதல் போட்டியில் களமிறங்கவே இல்லை. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த சீசனில் புது கேப்டன்களுடன் இந்த 2 அணிகளும் மோதுகிறது
விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வரும், லக்னோ அணிக்கு எதிரான இந்த போட்டியில் டெல்லி அணி பந்துவீசி வருகிறது. ஆனால், பிளேயிங் பிளேயிங் லெவனில் கே.எல்.ராகுல் இடம்பெறவில்லை. அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக விளையாடவில்லை என கேப்டன் அக்சர் படேல் தெரிவித்திருந்தார்.
அதன்படி, கே.எல்.ராகுலின் மனைவி கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அவருக்கு பெண் குழந்தாய் பிறந்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அவரே வெளியிட்டு இருக்கிறார்.
— K L Rahul (@klrahul) March 24, 2025
இதற்கிடையில், அதிரடியாக விளையாடி வந்த மிட்செல் மார்ஷ் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முகேஷ் குமார் அவரது விக்கெட்டை வீழ்த்தினார். பூரனுடன் சேர்ந்து, அவர் 42 பந்துகளில் 87 ரன்கள் சேர்த்தார். அவரை தொடர்ந்து, லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் அணியால் ரூ.27 கோடிக்கு வாங்கப்பட்ட ரிஷப் பந்த், 6 பந்துகளில் ஒரு ரன்கள் கூட எடுக்காமல் வெளியேறினார்.