ரோஹித் சர்மாவின் தற்போது நிலை என்ன….? கவாஸ்கர் கேள்வி..!
ரோஹித் சர்மாவிற்கு ஏற்பட்ட காயம் என்னவென்று தெரிந்து கொள்ள இந்திய ரசிகர்களுக்கு உரிமை உள்ளது என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
இந்த சீசன் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பாக விளையாடி வருகிறார்கள். 11 போட்டிகள் விளையாடி 7 போட்டிகள் வெற்றிபெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர். 4 முறை கோப்பையை வென்று சாதனை வைத்திருக்கும் மும்பை அணி 5 முறை கோப்பையை வெல்லும் நோக்குடன் அருமையாக விளையாடி வருகிறார்கள்.
இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு காயம் ஏற்பட்டது இதனால் அடுத்த இரண்டு போட்டிகள் ரோஹித் சர்மா விளையாடவில்லை அவருக்கு பதிலாக மும்பை அணியில் பொல்லார்டு கேப்டன்ஷி பணியை ஏற்றுக்கொண்டார்.
மேலும் ரோஹித் சர்மாவிற்கு ஏற்பட்ட காயங்கள் பற்றி எந்த ஒரு தகவலையும் மும்பை அணி நிர்வாகம் கொடுக்கவில்லை. இந்த நிலையில் மேலும் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. வருகின்ற டிசம்பர் 17ம் தேதி டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கின்ற நிலையில் விளையாடும் வீரர்களின் பட்டியலில் ரோஹித் சர்மா இடம் பெறவில்லை. இதனால் பல தரப்பிலிருந்து விமர்சனங்கள் எழுந்து வருகிறது. ரோஹித் சர்மா ரசிகர்கள் ட்வீட்டரில் #Hitman என்ற ஹாஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் ஸ்டார்ஸ் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது, ரோஹித் சர்மாவிற்கு காயம் ஏற்பட்டதாக கூறுகிறார்கள் ஆனால் என்ன காயம் என்று எங்களுக்கு தெரியவில்லை. அவருக்கு ஏற்பட்ட காயம் தீவிரமானதாக இருந்தால் நிச்சயம் அவர் வலைப்பயிற்சியில் ஈடுபட முடியாது ஆனால் அவர் வலைப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.
மேலும் மும்பை அணி நிர்வாகம் ரோஹித் சர்மாவிற்கு ஏற்பட்ட காயத்தை வெளியில் கூறாமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம் ஆனால் கூறுவது அவர்கள் கடமை . வெளிப்படையாக கூறினால் தான் அனைவருக்கு தெரியும். ரோஹித் சர்மாவிற்கு ஏற்பட்ட காயம் என்னவென்று தெரிந்து கொள்ள இந்திய ரசிகர்களுக்கு உரிமை உள்ளது என்றும் கூறியுள்ளார்.