சச்சின் கூறிய அறிவுரை என்ன சார் இப்படி பண்றீங்க என கேட்ட ரசிகர் ?
சச்சின் டெண்டுல்கர், தன் பேட்டின் கைப்பிடியை சோப்பு மற்றும் குழாய் நீரைப் பயன்படுத்தி சுத்தம் செய்யும் வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை தனது “சிறப்பு முறை” என்று அழைத்த சச்சின் யாரும் தனக்கு இவ்வாறு கற்றுக் கொடுக்க வில்லை என்றும் தனது உணர்வு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சச்சின் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்று ஏறத்தாழ 10 ஆண்டுகள் ஆகிஇருக்கலாம் ஆனால் பேட்டிங்கின் மேஸ்ட்ரோ சச்சின் டெண்டுல்கர் இன்றளவும் உலகம் முழுதும் பல ரசிகர்களால் பின்பற்றப்படுகிறார்.
49 வயதான சச்சின் தற்போது சாலை பாதுகாப்பு உலகத்தொடரில்(RSWS) இந்திய அணியை வழி நடத்துகிறார். கடந்த சனிக்கிழமை போட்டியின் தொடக்க ஆட்டத்தில் இந்திய லெஜெண்ட்ஸ் அணி சவுத் ஆப்ரிக்கா லெஜெண்ட்ஸ் அணியை 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் இந்திய லெஜெண்ட்ஸ் அணி செப்டம்பர் 14, புதன்கிழமை அன்று தனது 2ஆவது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட்ஸ் அணியுடன் விளையாட உள்ளது.
போட்டிக்கு முன்னதாக சச்சின் தனது பேட்டின் கைப்பிடியை சுத்தம் செய்யும் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இது எனக்கு வாழ்க்கையில் எல்லாவற்றையும் கொடுத்துள்ளது, எனவே இதை நான் கவனித்துக் கொள்ள வேண்டும்,” என்று சுத்தம் செய்யும் செயல்முறைக்குப் பிறகு சச்சின் கூறினார்
ட்விட்டர் பயனாளிகளில் ஒருவர் வீடியோவில் தண்ணீர்க்குழாய் ஓடுவதை சுட்டிக் காட்டி தண்ணீரை வீணாக்குவதாக விமர்சனம் செய்துள்ளார், “சார் தண்ணீரை சேமிக்க வேண்டாமா” என்று கேட்டுள்ளார்.