சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல அணியின் சிக்கலை தீர்க்க வேண்டும்.! ரோஹித் சர்மா என்ன செய்ய போகிறார்?
சாம்பியன்ஸ் டிராஃபி குறித்து பேசிய முன்னாள் வீரர் அசாருதீன், 'ரோஹித் சரியான நேரத்தில் ஃபார்மிற்கு வந்துள்ளார். அவர் சிறப்பாக விளையாடினால் இந்தியா CT கோப்பையை வெல்லலாம்' என்றார்.

துபாய் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் இந்திய அணி இன்று வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. துபாயில் நடைபெறும் இந்த ஆட்டம், இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த மைதானத்தில் கடந்த 2018 ஆசியக்கோப்பை நடைபெற்றது. இதில், இந்திய அணி விளையாடிய 6 போட்டிகளில், 5ல் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது.
அதேபோல், இந்த இரு அணிகளும் ஒருநாள் போட்டியில் இதுவரை 41 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 32 போட்டிகளில் இந்தியாவும், 8 போட்டிகளில் வங்கதேசமும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி முடிவில்லாமல் கைவிடப்பட்டது.
அதே வெற்றி ரெக்கார்டை இந்திய அணி தொடருமா என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முதலில் பந்துவீச்சை தேர்வு செய்பவர்களுக்கு இந்த மைதானம் சாதகமாக இருக்கும் என கருதப்படுகிறது. இப்போதைக்கு நேரம் நெருங்கிவிட்டது. ரோஹித் சர்மாவின் இந்திய அணி, சிறந்த ப்ளெயிங் லெவேனை உருவாக்க வேண்டும். அணியின் கேப்டன் சிறந்த வீரர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
அதை விட, ரோஹித் சர்மா உட்பட சிறந்த வீரர் வரிசையில் உள்ள ஒவ்வொரு பேட்டர்களும் சிறப்பாக விளையாட வேண்டும். முன்னதாக, சாம்பியன்ஸ் டிராஃபி குறித்து பேசிய முன்னாள் வீரர் அசாருதீன், ‘ரோஹித் சரியான நேரத்தில் ஃபார்மிற்கு வந்துள்ளார். அவர் சிறப்பாக விளையாடினால் இந்தியா CT கோப்பையை வெல்லலாம் என்றார்.
இந்த நிலையில், அணியில் விராட் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். இன்று நடைபெறவிருக்கும் வங்கதேசத்திற்கு எதிரான முதல் போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டும். இங்கிலாந்து தொடரில் அவர் ஒரு 52 ரன்கள் எடுத்தார். இதைவிட, அணியின் வீரர்களை தேர்ந்தெடுக்கும் பிரச்சினை இன்னும் முடிவடையவில்லை. வங்கதேச போட்டிக்கு மட்டுமல்ல, முழு போட்டிக்கும் கே.எல். ராகுல் vs ரிஷப் பந்த் யார் என்று ரோஹித் சர்மா முடிவெடுக்க வேண்டும்.
அணியில் இரண்டு ஸ்பின்னர்கள் மற்றும் மூன்று ஆல்ரவுண்டர்கள் உள்ளனர் என்று ரோஹித் சர்மா சமீபத்திய செய்தியாளரின் சந்திப்பின் போது தெளிவுபடுத்தினார். குல்தீப் யாதவ், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் உள்ளனர்.
மேலும், முகமது ஷமி உறுதியாக இருக்கிறார், இரண்டாவது வேகப்பந்து வீச்சாளர் யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. எவ்வாறாயினும் இன்னும் சிறிது நேரத்தில் என்ன நடக்க போகிறது. யார் யார் விளையடுவார்கள் யார் இல்லை என்று தெரிந்து விடும். காத்திருந்து பர்ப்போம்.
இந்திய அணி:
கேப்டன் ரோஹித் சர்மா லைமையிலான அணியில், கே.எல். ராகுல், ஷுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ஹார்டிக் பாண்ட்யா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் உள்ளனர்.