அவருக்கு மட்டும் விவிஐபி கிச்சை ஏன்? சிகிச்சை அளிப்பதிலும் பாரபட்சமா? ஹசன் அலி சாடல்…

காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பாரபட்சமான நடத்தை குறித்து பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.

Saim Ayub injury - hasan ali

பாகிஸ்தான் : மோசமான ஃபார்ம் காரணமாக தற்போது பாகிஸ்தான் அணியில் இருந்து விலகி இருக்கும் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி, தனது சொந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் (பிசிபி) ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.

சமீபத்தில், இது குறித்து தனியார் ஊடகம் உரையாடலில் பேசிய ஹசன் அலி, “இளம் நட்சத்திர பேட்ஸ்மேன் சைம் அயூப்புக்கு ஏற்பட்ட காயத்தின் சிகிச்சைக்காக லண்டனுக்கு அனுப்பியதற்காக பிசிபியை கேள்வி எழுப்பினார். மற்ற வீரர்களுக்கு ஏன் அதே சலுகை கிடைக்கவில்லை?” என்றும் கேள்வி எழுப்பினார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதாக ஹசன் அலி குற்றம் சாட்டியதோடு, அயூப் விரைவில் குணமடைய வேண்டும் என்று ஹசன் அலிஸ் வாழ்த்தினார். அதே வேளையில், அவர் தனது காயத்திற்கு விவிஐபி சிகிச்சை பெறுகிறார். இதேபோல், 2020-ல் நான் காயமடைந்தேன், அப்போது நான் என்ன பாகிஸ்தான் அணியில் இடம்பெறவில்லையா? நான் இந்தியாவுக்காக விளையாடினேனா?” என்று அடுக்கு அடுக்காய் கேள்வி சிகிச்சையின் நியாயத்தை கேட்டார்.

ஏன் அவருக்கு மட்டும் விவிஐபி சிகிச்சையை வழங்குகிறீர்கள். அதேபோல் எதிர்காலத்தில் எந்த வீரருக்காவது இவ்வாறு காயம் ஏற்பட்டால், பிசிபி அவர்களுக்கும் அதே சிகிச்சை கிடைக்குமா? இல்லை, அவர்கள் வழங்க மாட்டார்கள்” என்று தனது விரக்தியை வெளிப்படுத்தினார்.

தெடர்ந்து பேசிய அவர், சைம் அயூப் மீண்டும் உடற்தகுதிக்கு வந்து பாகிஸ்தானுக்காக பல போட்டிகளில் விளையாடி வெற்றி பெறுவார் என்று தான் நம்புவதாகவும், ஒவ்வொரு எழுச்சிக்கும் ஒரு வீழ்ச்சி இருக்கும் என்று தான் நம்புவதாகவும் கூறினார்.

கடந்த மாதம் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திலிருந்து சைம் அயூப் அணியில் இடம்பெறவில்லை. தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபியிலும் பங்கேற்கவில்லை. அவர் தனது வலது கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு தற்போது சிகிச்சைக்காக லண்டனில் உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 25032024
Manoj Bharathiraja
eps - Annamalai
GT vs PBKS
Avesh Khan
csk ms dhoni and ambati rayudu
Vikram