எவ்வளவா இருந்தா என்ன? ‘அதெல்லாம் தரமுடியாது’! பந்துக்காக சண்டை போட்ட நபர்!

TNPL

TNPL : தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை திண்டுக்கல்லில் உள்ள என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ்  அணிகள் மோதியது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மதுரை பாந்தர்ஸ் அணி
20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. சுரேஷ் லோகேஷ்வர் அதிகபட்சமாக 55 ரன்கள் எடுத்தார். 40 பந்துகளில், ஜெகதீசன் கௌசிக் 24 பந்தில் 43* ரன்கள் எடுத்தார். அடுத்ததாக 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 8 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் மதுரை பாந்தர்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த போட்டியில் அனைவரும் கவரும் வகையில் வேடிக்கையான சம்பவம் ஒன்றும் நடந்துள்ளது. அது என்னவென்றால், சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியின் இடது கை பேட்டர் ஸ்டேடியத்திற்கு வெளியே சிக்ஸர் விளாசினார். அந்த பந்து வேகமாக சென்று பக்கத்தில் இருந்த தோட்டத்தில் விழுந்தது.

பந்து விழுந்ததை பார்த்த அந்த தோட்டக்காரர் பந்தை எடுத்து வைத்துவிட்டு நான் தரமாட்டேன் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பந்தின் விலை பற்றியும் பேசியும் கூட அவர் பந்தை திரும்பி தருவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மறுப்பு தெரிவித்து விலை எவ்வளவாக இருந்தால் எனக்கு என்ன பந்து எனக்கு தான் சொந்தம் என்று கூறி பந்தை எடுத்து சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்