பாகிஸ்தானில் அவர் இருந்தா என்ன? இந்திய பேட்ஸ்மேன்கள் பாத்துப்பாங்க – கங்குலி!

Published by
பால முருகன்

ஆசியகிரிக்கெட் 2023 கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், வரும் செப்டம்பர் 2-ஆம் தேதி நடைபெறவுள்ள போட்டியில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் மோதுகிறது. அந்த போட்டியை காண தான் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் காத்துள்ளனர். போட்டி தொடங்க இன்னும் சில நாட்கள் மட்டும் இருக்கும் நிலையில், இரண்டு அணி வீரர்களும் பயிற்சி எடுத்து வருகிறார்கள்.

இதற்கிடையில், பாகிஸ்தானின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடி இந்திய அணியின் பேட்ஸ் மேன்களுக்கு சவாலாக அமைவார் என்றும், அவருடைய பந்துவீச்சை எதிர்கொள்ள இந்திய வீரர்களுக்கு சற்று சிரமாக இருக்கும் எனவும் ஆஸ்ரேலியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டாம் மூடி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பாகிஸ்தானின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடி ஒரு சிறந்த பந்து வீச்சாளர் என்றாலும், அவருடைய பந்துவீச்சை எதிர்கொள்ள இந்திய கிரிக்கெட் அணியில் பல வீரர்கள் இருக்கிறார்கள் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கங்குலி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய கங்குலி ” சர்வதேச கிரிக்கெட்டில் ஷஹீன் அப்ரிடி  ஒரு சிறந்த பந்து வீச்சாளர். ஆனால், அதற்காக எல்லா போட்டியிலும்  அவரால் சிறப்பாக பந்துவீசிட முடியாது. அவரைப்போலவே ஒவ்வொரு அணியிலும் இதுபோன்ற இரண்டு பந்துவீச்சாளர்கள் இருப்பார்கள். குறிப்பாக ஆஸ்திரேலியா அணியில் மிட்செல் ஸ்டார்க், பாட்கம்மின்ஸ் உள்ளனர். அவர்களை போல வீரர்களை அருமையாக எதிர்கொண்டு விளையாடுவதற்கு இந்தியாவிடம் பேட்ஸ்மேன்கள் உள்ளனர்’. என பாகிஸ்தானில் அவர் இருந்தா என்ன? இந்திய பேட்ஸ்மேன்கள் பாத்துப்பாங்க என்பது போல கூறினார்.

எனவே, அதைப்போல ஷஹீன் அப்ரிடி பந்துவீச்சையும் எதிர்கொள்ள இந்திய அணியில் பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள்” என கங்குலி கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய கங்குலி கடந்த காலத்தில் இந்திய அணி எப்படி இருந்தது என்பது குறித்தும் பேசினார். இது குறித்தும் பேசிய அவர் ” கடந்த காலத்தில் நாங்கள் மிகச் சிறந்த அணியாக இருந்தோம், அந்த சமயம் எல்லாம் தொடர்ச்சியாக வெற்றி பெறத் தொடங்கியிருந்தோம். எங்களிடம் சில அற்புதமான வீரர்கள் இருந்தனர். எனவே புதிய புதிய வீரர்களை மாற்றாமல் ஒரே வீரர்களை வைத்து தான் வெற்றிபெற்றோம் ” எனவும் கங்குலி தெரிவித்துள்ளார்

Published by
பால முருகன்

Recent Posts

அதிரடியாக குறைந்த தங்கம் விலை… சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…

7 minutes ago

1 மணி வரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…

20 minutes ago

“பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள்” தமிழக அரசுக்கு அட்வைஸ் செய்த விஜய்!

சென்னை : இன்று சர்வதேச அளவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக வெற்றிக்…

30 minutes ago

இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடிக் கொடுத்த ஹிஸ்புல்லா! 250 ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல்!

ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…

46 minutes ago

அதானி விவகாரம்., வயநாடு விவகாரம்., ஆரம்பிக்கும் முன்னரே ஆட்டத்துக்கு தயாரான எதிர்க்கட்சிகள்!

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…

1 hour ago

“கூட்டணிக்கு வர 100 கோடி கேக்குறான்” அதிமுக கூட்டத்தை கலாய்த்த உதயநிதி!

சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. …

2 hours ago