மழை காரணமாக 5 ஓவராக குறைப்பட்டால் என்ன ஆகும் ? ஆர்சிபி அணிக்கு தொடரும் சோதனைகள் !!

Published by
அகில் R

சென்னை : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் மழை குறுக்கிட்டு 5 ஓவர்களாக குறைக்கப்பட்டால் என்ன நடக்கும், ஆர்சிபி அணி என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ஐபிஎல் தொடரானது முடிவடையும் கட்டத்தை நெருங்கி உள்ளது, மேலும் பிளே ஆஃப் சுற்றுக்கு 3-அணிகள் இதுவரை தகுதி பெற்றுள்ளது. இன்னும் 1 அணிக்கான போட்டியில் சென்னை- பெங்களூரு அணிகள் இருந்து வருகின்றன. இன்று நடைபெறும் போட்டியில் மாபெரும் வெற்றியை பதிவு செய்யும்  அணி பிளே ஆஃப் சுற்றருக்கு தகுதி பெறுவார்கள்.

அதே போல கடந்த சில நாட்களாக ஐபிஎல் தொடர் மழையால் போட்டிகள் தடை பெற்றும் வருகிறது. அதே நேரத்தில் சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இன்றைய போட்டியிலும் மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தது. அதே போல இன்றைய போட்டியில் 80% மழை பொழிவுக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ஒரு வேளை மழை குறுக்கிட்டு போட்டியை 5 ஓவர்களாக குறைக்கப்பட்டால் ஆர்சிபி அணிக்கு பெரிய சிக்கலாக அமைந்து விடும் என்று தெரிகிறது.

ஒரு வேளை 5 ஓவர்களாக குறைக்கப்பட்டால், முதலில் பெங்களூரு அணி பேட்டிங் செய்ய நேரிட்டால் அந்த அணி ஒரு வேளை 90 ரன்கள் அடித்தால் சென்னை அணியை 72 ரன்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் அல்லது இரண்டாவதாக பேட்டிங் செய்யும் பட்சத்தில் என்ன இலக்காக இருந்தாலும் அதை 3.2 ஓவர்களில் சேஸிங் செய்ய வேண்டும். அப்படி செய்தால் மட்டும் ஆர்சிபி அணி, சென்னை அணியை ரன்ரேட் அடிப்படையில் முந்தி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும்.

ஏற்கனவே, மழை குறுக்கிட்டு போட்டி நடைபெறாமல் போனால் சென்னை அணி புள்ளி அடிப்படையில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி விடுவராகள். இப்படி பல சிக்கல்களை எதிர்கொண்ட பெங்களூரு அணிக்கு இந்த மழையானது பெரும் இக்கட்டான நிலைக்கு பெங்களூரு அணியை தள்ளி இருக்கிறது. இதனால்  பெங்களூரு அணி ரசிகர்களும் பெரும் வருத்தத்தில் இருந்து வருகின்றனர். மேலும், இன்றைய போட்டியானது கண்டிப்பாக நடக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பில் 2 அணி ரசிகர்களும் இருந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
அகில் R

Recent Posts

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

9 hours ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

11 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

12 hours ago

புஷ்பா 2 வெளியீடு: நெரிசலில் சிக்கிய சிறுவன் மூளைச் சாவு… தாயை தொடர்ந்து மகனும் உயிரிழந்த சோகம்!

ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…

12 hours ago

“அம்பேத்கர்… அம்பேத்கர்…” அமித்ஷாவை வன்மையாக கண்டிக்கிறேன் – கொந்தளித்த விஜய்!

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…

13 hours ago

இன்றும், நாளையும் 4 மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் – டெல்டா வெதர்மேன்.!

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…

14 hours ago