பும்ராவுக்கு என்ன தான் ஆச்சு? பிரசித் கிருஷ்ணா கொடுத்த தகவல்!
இந்திய அணியின் கேப்டன் பும்ரா தற்போது மருத்துவ கண்காணிப்பில் உள்ளார் என பிரசித் கிருஷ்ணா முக்கிய தகவலை கொடுத்துள்ளார்.
சிட்னி : ஆஸ்ரேலியாவுக்கு எதிராக இந்தியா விளையாடி வரும் 5-வது டெஸ்ட் போட்டியை அணியை கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா வழிநடத்தி வருகிறார். 5-போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் மட்டும் தான் வெற்றிபெற்றது. அதுவும் முதல் போட்டி அந்த முதல் போட்டியை பும்ரா தான் கேப்டனாக வழிநடத்தினார். அதற்கு அடுத்ததாக ரோஹித் சர்மா 3 போட்டிகளை கேப்டனாக வழிநடத்திய நிலையில், இந்திய அணி ஒரு போட்டியில் கூட வெற்றிபெறவில்லை.
இந்த சூழலில், 5-வது போட்டியில் ரோஹித் சர்மா விலகியுள்ள நிலையில், ஜஸ்பிரித் பும்ராவுக்கு கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. போட்டியின் இரண்டாவது நாளில் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக மைதானத்தை விட்டு வெளியேறியபோது இந்திய கிரிக்கெட் அணி ஆரம்ப அடியை சந்தித்தது. ஸ்கேன்களுக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மதிய உணவிற்குப் பிறகு ஸ்கேன் செய்ய முடிவு செய்து அவர் விளையாடி கொண்டு இருந்தார்.
பிறகு திடீரென மைதானத்தில் இருந்து வேகமாக வெளியேறினார். இதனால் பும்ராவுக்கு என்னதான் ஆச்சு என சமூக வலைத்தளங்களில் கேள்விகள் எழும்ப தொடங்கிவிட்டது. இந்த சூழலில், பும்ரா உடல் நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து அணியின் சக வீரரான வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா 2-ஆம் நாள் ஆட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
இது குறித்து பேசிய அவர் ” . ஜஸ்பிரித் பும்ராவுக்கு முதுகு பிடிப்பு ஏற்பட்ட காரணத்தால் தான் அவர் வேகமாக மருத்துவமனைக்கு சென்றார். காயத்தின் அளவை உறுதிப்படுத்த ஸ்கேன் எடுக்கப்பட்டது. பும்ரா தற்போது மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் இருப்பதாகவும், சரியான நேரத்தில் அவரது உடல்நிலை குறித்து மேலும் தெரிவிக்கப்படும்” எனவும் அவர் தெரிவித்தார்.
தற்போது அவர் மருத்துவமனையில் இருக்கும் காரணத்தாழும், நாளை நடைபெறும் 3-ஆம் நாள் ஆட்டத்தில் அவர் பேட்டிங் செய்ய வருவாரா? இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். 2-வது நாள் ஆட்டமும் முடிவுக்கு வந்த நிலையில், 6 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் ரவீந்திர ஜடேஜா (8) *, வாஷிங்டன் சுந்தர் (6)* ரன்களுடன் உள்ளனர்.