நடப்பு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் மோதி வருகிறது. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் இறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 240 ரன்கள் எடுத்துள்ளது.
இந்நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா போட்டியின் டாஸ்க்கு முன் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலிக்கு தனது கையெழுத்திட்ட ஜெர்சியை பரிசாக வழங்கினார். இந்த ஜெர்சி கடந்த 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி மாலை இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் டெண்டுல்கர் அணிந்திருந்தது.
ஜெர்சியுடன், டெண்டுல்கர் கோலிக்கு ஒரு கடிதத்தையும் கொடுத்தார். அதைப் படித்த பிறகு விராட் மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். இந்தியாவின் இந்த இரண்டு பெரிய ஜாம்பவான்களின் சந்தித்த இந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. கடந்த 2011-ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய வெற்றி பெற்று 28 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது உலகக் கோப்பை பட்டத்தை வென்றது.
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…
மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…
கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…
காஞ்சிபுரம்: வருகின்ற ஜன.20ம்தேதி தவெக தலைவர் விஜய், பரந்தூரில் இருக்கும் மக்களை சந்திக்க காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்க்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல்…