விக்கெட் வீழ்த்தியும் என்கிட்ட என்ன எதிர்பார்க்கிறீர்கள் ? ஆதங்கத்தை கொட்டி தீர்த்த முகமது ஷமி..!
முகமது ஷமி : இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அசத்தலான பந்துவீச்சை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது இருப்பினும், இவருக்கு கிடைக்கவேண்டிய வாய்ப்பு ஒரு சில சமயங்களில் மறுக்கவும் பட்டு இருக்கிறது.
அதாவது, கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் 4 போட்டிகளில் மட்டுமே விளையாடிய ஷமி அசத்தலாக பந்து வீசி மொத்தமாக 14 விக்கட்டுகளை வீழ்த்தி இருந்தார். இருப்பினும், இந்த தொடரின் தொடக்கத்தில் அவருக்கு சரியாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இது குறித்து வேதனையுடன் சமீபத்தில் பேசியுள்ளார்.
அவரது யூடியூப் சேனலில் ப்ளக்-இன் என்ற நிகழ்ச்சியில் அளித்த பேட்டியில் முகமது ஷமி பேசினார். அதில், ” நடந்து முடிந்த 2019 உலக கோப்பை தொடரின் தொடக்க சில போட்டிகளில் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் என்னால் விளையாட முடியாமல் போனது. அதற்கு பின்னர் எனக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி, தொடர்ந்து பல விக்கெட்டுகளை கைப்பற்றினேன்.
அந்த ஆண்டை போலவே, கடந்த 2023 ஆண்டும் எனக்கு வாய்ப்பு கிடைத்து நான் சிறப்பாக விளையாடியதாக தான் நினைக்கிறன். ஆனால் உண்மையில் சொல்ல வேண்டும் என்றால், கடந்த 2019-ஆம் ஆண்டு நான் எனக்கு எந்த அளவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தேனோ அந்த அளவுக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்று தான் சொல்வேன்.
ஏனென்றால், நான் அந்த தொடரின் மூன்று போட்டிகளில் விளையாடிய போதிலும் கிட்டத்தட்ட ஒரு 13 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தேன் என்று நினைக்கிறன். அப்படி இருந்தும் கூட எனக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை விக்கெட்கள் வீழ்த்தியும் கூட என்னிடமிருந்து எதை எதிர்ப்பார்க்கிறார்கள் என்பது உன்மையாகவே தெரியவில்லை.
எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதனை எப்படி சிறப்பாக பயன்படுத்தி கொள்ள வேண்டுமோ அதனை நன்றாக பயன்படுத்தி நானும் நன்றாக விளையாடுகிறேன். இருந்தாலுமே நான் எதிர்பார்த்த அளவுக்கு எனக்கு இந்திய அணியில் வாய்ப்பு இல்லாமல் போனது ரொம்பவே ஏமாற்றமாக அமைந்தது”, என்று முகமது ஷமி வேதனையுடன் பேசியுள்ளார்.