நான் எதை தவறவிட்டேன்? ஒரே நாளில் 23 விக்கெட்… நம்ப முடியவில்லை – சச்சின் ஆச்சிரியம்
தென்னாப்பிரிக்கா – இந்தியா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று கேப் டவுன்-ல் இருக்கும் நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானதில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு, முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய சில மணி நேரங்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அதிர்ச்சியை கொடுத்தது.
அதாவது, இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், முதல் இன்னிங்ஸில் 23.2 ஓவரில் 55 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில், முகமது சிராஜ் மட்டுமே 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து, தனது முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 153 ரன்கள் மட்டுமே எடுத்து.
#INDVSSA : ஒரே நாளில் 23 விக்கெட்! 122 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை!
இதன்பின், நேற்றே தந்து இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி நேற்றய நேரம் முடிவில் 17 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழந்து 62 ரன்கள் எடுத்துள்ளது. இதில், குறிப்பாக டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்திலேயே இரு அணிகளிலும்(இந்தியா 10, தென்னாபிரிக்கா 13) 23 விக்கெட்டுகள் விழுந்து 122 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சாதனை மீண்டும் படைக்கப்பட்டு இருக்கிறது.
இதுதொடர்பாக கிரிக்கெட் பிரபலங்கள் உள்ளிட்டோர் பலர், சமுக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் போட்டி குறித்து முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், ஒரே நாளில் 23 விக்கெட்டுகள் விழுந்ததை என்னால் நம்ப முடியவில்லை. நான் விமானத்தில் ஏறும்போது, தென்னாபிரிக்கா அணி முதல் இன்னிஸில் ஆல் – அவுட் ஆனபோது. அதன்பின்னர், விமானத்தில் இருந்து இறங்கி வீட்டிற்கு சென்று மீண்டும் போட்டியை பார்க்கும்போது தென்னாபிரிக்கா அணி 3 விக்கெட்டுகளை இழந்து இருந்தது. இதன் இடையில் நான் எதை தவறவிட்டேன் என சொல்லுங்கள் என்பதுபோல் பதிவிட்டுள்ளார்.
Cricket in ‘24 begins with 23 wickets falling in a single day.
Unreal!
Boarded a flight when South Africa was all out, and now that I’m home, the TV shows South Africa has lost 3 wickets.
What did I miss?#SAvIND— Sachin Tendulkar (@sachin_rt) January 3, 2024