விராட் கோலிக்கே சிரமம்… தோல்வி குறித்து டு பிளெசிஸ் கூறியது என்ன?

Faf du Plessis

ஐபிஎல்2024: முதல் இன்னிஸில் பேட்டிங் செய்வது எளிதானது அல்ல என்று தோல்விக்கு பிறகு பெங்களூரு கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் கூறியுள்ளார்.

ஐபிஎல் 2024 தொடரின் 10வது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான பெங்களூரு அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீசியது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்களை எடுத்தது. இதில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 83 அடித்து கடைசி வரை களத்தில் இருந்தார். இதன்பின் களமிறங்கிய கொல்கத்தா அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி இலக்கை சுலபமாக எட்டியது.

அதாவது, 16.5 ஓவரில் 3 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 186 ரன்களை எடுத்து இந்த ஐபிஎல் சீசனில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. இந்த தோல்விக்கு பிறகு பெங்களூரு கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் கூறியதாவது, இது வித்தியாசமான ஒன்று, முதல் இன்னிங்ஸ் விக்கெட் என்பது இரண்டு வேகமானது என்று நாங்கள் நினைத்தோம்.

அதன்படி, பவுலர்கள் கட்டர்ஸ் மற்றும் பேக் ஆஃபி லென்த் பால் போடும்போது பேட்டர்கள் சிரமப்பட்டதை பார்த்தோம். இதனால் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்வது எளிதானது அல்ல. முதல் இன்னிங்ஸில் பிட்ச் இரண்டு விதமாக இருந்ததால் சிறப்பாக விளையாடிய விராட் கோலியே ரன்கள் அடிக்க சிரமப்பட்டார்.

இருப்பினும், கொஞ்சம் கொஞ்சமாக பனி வந்ததால் நல்ல ஸ்கோர் என்று நினைத்தோம். ஆனால், எதிரணி பேட்டிங் செய்யும்போது பவர் பிளேவில் நரேன் மற்றும் சால்ட் அதிரடியாக விளையாடி எங்களது பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தத்தை கொடுத்தனர். அவர்கள் சிறப்பாக பேட்டிங் செய்தனர்.

நல்ல கிரிக்கெட் ஷாட்களை அடித்து ஆட்டத்தை அவர்கள் பக்கம் திருப்பினர். நரேன் இருப்பதால் ஸ்பின் பவுலிங் எடுபடாது, இதனால் வேகப்பந்துவீச்சாளரை பயன்படுத்தினோம். இருந்தாலும் முதல் ஆறு ஓவர்களில் ஆட்டத்தை கைப்பற்றினர். இந்த பிட்சியில் பந்தை இரண்டு பக்கத்திலும் சுழற்றக்கூடிய ஒரு ஸ்பின்னர் இருந்திருக்க வேண்டும்.

ஆனால் எங்கள் அணியின் செட்-அப்பில் அந்த ஆப்சன் இல்லை. இதுபோன்று ரசல் போன்று மெதுவாக பந்துகளை வீசக்கூடியவர்களை இந்த ஆடுகளத்தில் எதிர்கொள்ள மிகவும் கடினம் என்று நாங்கள் உணர்ந்தோம். எனவே, இந்த போட்டியின் மூலம் நாங்கள் சில பாடங்களை கற்றுக்கொண்டோம் எனவும் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi