[FILE IMAGE]
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் புகழ்ந்து தள்ளியுள்ளார். ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டி நாளை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக அனைத்து அணிகளும் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், இந்தியர்களுக்கு மட்டுமே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால், இரண்டு போட்டிகளும் மழையால் கைவிடப்பட்டது. ஆனால், மறுபக்கம் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க, சுமார் 7 வருடங்களுக்கு பிறகு இந்தியா வந்துள்ள பாபர் அசாம் தலைமையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, கடந்த சில நாட்களாக ஐதராபாத்தில் பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது. அதன்படி, பயிற்சி ஆட்டமும் அவர்களுக்கு சிறப்பாக அமைந்துள்ளது என்றே கூறலாம்.
அந்தவகையில், பாகிஸ்தான் vs நியூசிலாந்து, ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான் பயிற்சி போட்டிகள் நடைபெற்றது. இதில், நேற்று ஹைதராபாத்தில் பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பயிற்சி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 351 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 77, கிரீன் 50 ரன்களையும் குவித்தனர்.
பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 47.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 337 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 14 ரன்கள் வித்யாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. பாகிஸ்தான் அணி சார்பாக அதிகபட்சமாக சிறப்பாக விளையாடிய பாபர் அசாம் 90 ரன்களையும், முகமது நவாஸ் 50 ரன்களையும் குவித்தனர்.
ஏற்கனவே, நியூசிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் 80 ரன்கள் அடித்த பாபர் அசாம், நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 59 பந்துகளில் 90 ரன்களை குவித்து அசத்தியுள்ளார். இதன்மூலம் உலகக்கோப்பை தொடரில் பாபர் அசாமின் ஆட்டம் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி உள்ள பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் தள்ளியுள்ளார்.
இதுதொடர்பாக அவரது எக்ஸ் தள பதிவில், இந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் உறுதியாக இருக்கிறார். அதாவது, பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் சிறப்பாக விளையாடி வருவதாகவும், மேலும், பாகிஸ்தான் அணிக்கு முகமது நவாஸ் ஒரு பெரிய பிளஸ்ஸாக இருப்பார் எனவும் கூறியுள்ளார். ஆனால், பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை தொடக்க வீரர்கள் நிலைதான் கவலை அளிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுபோன்று, ஆஸ்திரேலிய அணியும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை ஜோஷ் இங்கிலீஸ் பேட்டிங்கில் வாய்ப்பு கிடைக்க வேண்டிய ஒரு வீரர். ஜோஷ் இங்கிலிஸ்க்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால், அந்த வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றும் அவர் ஒரு உற்சாகமான வீரர் எனவும் கூறியுள்ளார். மேலும், அவர்களின் பந்துவீச்சை பார்க்கும்போது, மிட்சல் ஸ்டார்க் முக்கியமான கட்டங்களில் சிறப்பாக செயல்படுகிறார் எனவும் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…