சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தானில் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன? லிஸ்ட் பெருசா இருக்கே…..
சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் வீரர்களுக்கு முறையான பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, நகரங்களில் 12,000 பாதுகாப்புப் பணியாளர்கள் நிறுத்தப்படுவார்கள்.

பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர், நாளை (பிப்.19) தொடங்கவுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் vs நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி பிப்ரவரி 19 அன்று கராச்சியில் நடைபெறுகிறது. இந்தியா தனது அனைத்து போட்டிகளையும் துபாயில் விளையாடவுள்ளது. மேலும் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி பிப்ரவரி 23 அன்று நடைபெறுகிறது.
இந்நிலையில், சர்வதேச போட்டிகளுக்கு பாதுகாப்பான மற்றும் அமைதியான சூழலை உறுதி செய்வதற்காக, வரவிருக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்காக லாகூர் மற்றும் ராவல்பிண்டி மைதானங்களுக்கு பஞ்சாப் காவல்துறை விரிவான பாதுகாப்பு ஏற்பாட்டை பஞ்சாப் காவல்துறை மேற்கொண்டுள்ளதாக இன்சைட் ஸ்போர்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த தகவலின்படி, வருகை தரும் வீரர்களுக்கு முறையான பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, நகரங்களில் 12,000 பாதுகாப்புப் பணியாளர்கள் நிறுத்தப்படுவார்கள். ராவல்பிண்டி மற்றும் லாகூர் ஆகிய இரு இடங்களிலும் தலா மூன்று போட்டிகள் நடைபெறும்.
இதில் 18 மூத்த அதிகாரிகள், 54 டிஎஸ்பிக்கள், 135 இன்ஸ்பெக்டர்கள், 1200 உயர் துணை அதிகாரிகள், 10,556 கான்ஸ்டபிள்கள் மற்றும் 200 பெண் அதிகாரிகள் அடங்குவர். இதில், லாகூரில் நடைபெறும் போட்டிகளுக்காக மட்டும் 8000 அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள், இதில் 12 மூத்த அதிகாரிகள், 39 டிஎஸ்பிக்கள், 86 இன்ஸ்பெக்டர்கள், 700 உயர் துணை அதிகாரிகள் மற்றும் 6,673 கான்ஸ்டபிள்கள், 129 பெண் கான்ஸ்டபிள்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.
இதேபோல், ராவல்பிண்டியில் நடைபெறும் போட்டிகளின் போது 5,000க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வார்கள். பாதுகாப்புப் படையில் ஆறு மூத்த அதிகாரிகள், 15 டிஎஸ்பிக்கள், 50 இன்ஸ்பெக்டர்கள், 500 மேல் துணை அதிகாரிகள், 4,000 கான்ஸ்டபிள்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட பெண் பணியாளர்கள் இருப்பார்கள்.