போச்சா அந்த ரூ.1.50 கோடி ..? ஹசரங்காவிற்கு பதிலாக இனி இவர் தான் ..!
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியில் இடம் பெற்றிருந்த ஹசார்ங்கவிற்கு பதிலாக விஜயகாந்த் வியாஸ்காந்த்தை தற்போது வாங்கி உள்ளனர்.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்றிருந்த வனிந்து ஹசரங்காவிற்கு பதிலாக இலங்கை அணியின் இளம் வீரரான விஜயகாந்த் வியாஸ்காந்த்தை தற்போது ஹைதராபாத் அணி எடுத்துள்ளது. கடந்த ஐபிஎல் ஏலத்தில் லெக் ஸ்பின்னரான ஹசரங்காவை பெங்களூரு அணி விடுவித்தது. அதன் பிறகு நடைபெற்ற ஏலத்தில் ஹைதராபாத் அணி ஹசரங்காவை ரூ.1.50 கோடி கொடுத்து எடுத்தனர்.
இந்நிலையில், வங்காளதேச அணியுடன் நடைபெற்ற தொடரில் இடது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக வனிந்து ஹசரங்கா நடப்பு ஐபிஎல் தொடரில் கலந்து கொள்வாரா மாட்டாரா என்று சர்ச்சைகள் எழுந்துகொண்டே இருந்தது. இதற்கு பிசிசிஐயும், ஹைதரபாத் வாரியமும் பல கடிதங்களை இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு அனுப்பியது.
அதன் பின் தற்போது ஹசார்ங்கா நடைபெற்று கொண்டிருக்கும் இந்த ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக தெரிவிக்கப்பட்டது. அதனால் அவருக்கு பதிலாக அவரை போலவே லெக் ஸ்பின்னர் இலங்கை வீரரான விஜயகாந்த் வியாஸ்காந்த்தை ரூ.50 லட்சத்திற்கு ஹைதராபாத் அணி ஒப்பந்தம் செய்துள்ளனர். இவர் வரும் போட்டிகளில் விளையாடுவாரா என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
விஜயகாந்த் வியாஸ்காந்த், இலங்கை அணிக்காக ஒரே ஒரு சர்வேதச டி20I போட்டியில் மட்டுமே விளையாடி உள்ளார். அதிலும் 4 ஓவர்கள் பந்து வீசி அவர் வெறும் 28 ரன்களை விட்டு கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றி உள்ளார். மேலும், உள்ளூரில் நடைபெறும் டி20 போட்டிகளில் விளையாடிய இவர் மொத்தம் 33 போட்டிகளில் விளையாடி 42 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.