இப்படி பட்ட ரன் அவுட்டை யாரு பாத்திருக்க மாட்டிங்க- என்ன ஒரு புத்திசாலித்தனம்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 போட்டியில் இலங்கை பந்துவீச்சாளர் சன்டகன் செய்த ரன் அவுட் வீடியோ வைரலாகி வருகிறது.
இலங்கை அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.அதன்படி தற்போது டி-20 தொடர் நடைபெற்று வருகிறது.முதல் டி-20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இதனை தொடர்ந்து இரண்டாவது டி-20 போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் கிரிக்கெட் மைதானத்தில் ( Brisbane Cricket Ground) நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 117 ரன்கள் மட்டுமே அடித்தது.இலங்கை அணியில் அதிகபட்சமாக குசல் பெரேரா 27 ரன்கள் அடித்தார்.மற்ற வீரர்கள் ஜொலிக்க தவறிவிட்டனர்.
ஆஸ்திரேலிய பந்துவீச்சில் பில்லி,கம்மின்ஸ்,சம்பா மற்றும் அஷ்டான் ஏகர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.பின்னர் 118 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது.முதலில் தொடக்க வீரரான பின்ச் டக் -அவுட்டாகி வெளியேறினார்.ஆனால் வார்னர் மற்றும் ஸ்மித் ஜோடி சிறப்பாக விளையாடி அணியின் வெற்றியை செய்தார்கள்.13 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து ஆஸ்திரேலிய அணி வெற்றி இலக்கான 118 ரன்களை அடித்து வெற்றிபெற்றது.களத்தில் வார்னர் 60 * மற்றும் ஸ்மித் 53 * ரன்களுடன் இருந்தனர்.
ஆனால் இந்த போட்டியின் நடுவே சுவாரசியமான நிகழ்வு ஓன்று நடைபெற்றுள்ளது.அப்பொழுது ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தது.களத்தில் வார்னர் மற்றும் ஸ்மித் இருந்தனர்.13 -வது ஓவரை இலங்கை லக்சன் சன்டகன் வீச வந்தார்.அந்த ஓவரின் 2-வது பந்தை வீசும்போது வார்னர் பேட்டிங் பிடித்து கொண்டிருந்தார்.
Sandakan had a golden opportunity to run out Smith! #AUSvSL pic.twitter.com/E7AsOwEjSJ
— cricket.com.au (@cricketcomau) October 30, 2019
மறுமுனையில் ஸ்மித் இருந்தார்.அந்த சமயத்தில் வார்னர் பந்தை ஸ்டம்பிற்கு நேராக அடித்தார்.பந்து சரியாக ஸ்டம்பில் பட்டது.ஆனால் ஸ்மித் எல்லைக்கோட்டின் வெளியே இருந்தார்.உடனே சன்டகன் பந்தை எடுத்து ரன் அவுட் செய்ய முயற்சி செய்தார்.ஆனால் சன்டகன் பந்தை ஒரு கையில் வைத்துக்கொண்டு மறுகையால் ஸ்டம்ப்பை பிடுங்கினார்.விதியின் படி பந்து இருக்கும் கையால் தான் ரன் -அவுட் செய்ய வேண்டும் .ஆனால் இவர் மாறாக செய்ததால் ஸ்மித் அவுட்டாகவில்லை.மேலும் சன்டகனின் இந்த செயலால் மைதானம் முழவதும் ஒரே சிரிப்பலையாக இருந்தது.