INDvsWI: டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீச முடிவு…!
இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளது. இந்தப் பயணத்தில் முதலில் நடைபெற்ற டி 20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி வென்று கோப்பையை கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது.
இன்று முதல் டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது.இப்போட்டி ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இந்திய அணி வீரர்கள்:
மாயங்க் அகர்வால், லோகேஷ் ராகுல், சேடேஷ்வர் புஜாரா, விராட் கோலி (கேப்டன்), அஜிங்க்யா ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள்:
கிரெய்க் பிராத்வைட், ஜான் காம்ப்பெல், ஷாய் ஹோப் (விக்கெட் கீப்பர்), ஷமர் ப்ரூக்ஸ், டேரன் பிராவோ, ஷிம்ரான் ஹெட்மியர், ரோஸ்டன் சேஸ், ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), மிகுவல் கம்மின்ஸ், ஷானன் கேப்ரியல், கெமர் ரோச் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.