டெஸ்ட் போட்டி: ENG vs WI வெற்றி யாருக்கு தெரியுமா..?

Default Image

டெஸ்ட் போட்டி: மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்து-வெஸ்டிண்டிஸ் நாட்டிற்கு இடையே 3 தொடர்களை கொண்ட டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளதாக அறிவிததது. இந்த நிலையில் அந்த தொடரின் முதல் போட்டி, நேற்று தொடங்கியது 117 நாட்களுக்கு பிறகு நடைபெற்ற இந்த கிரிக்கெட் தொடரில், கொரோனா அச்சம் காரணமாக ரசிகர்கள் மைதானத்தில் போட்டிகளை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் நடந்து வருகிறது. டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து 204 ரன்னில் வெஸ்டிண்டிஸ் அபார பந்துவீச்சில் சுருண்டது என்றே கூறலாம், மேலும் வெஸ்டிண்டிஸ் அணியின் பந்துவீச்சாளர் ஜாசன் ஹோல்டர் 6 விக்கெட்டுகளை எடுத்து வெஸ்டிண்டிஸ் அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார்.

இந்நிலையில் தனது முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி கிரேக் பிராத்வெய்ட் 65 ரன்கள் அடித்து தனது அரை சத்தத்தால் மிரட்டினார் என்றே கூறலாம், மேலும் அவரை தொடர்ந்து ஷேன் டாவ்ரிச்னும் 61 ரன்கள் எடுத்து இருவரின் கூட்டணியில் 318 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. பின்னர் 114 ரன்கள் பின்தங்கிய நெருக்கடியுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 313 ரன்களை சேர்த்தது.

இந்நிலையில் இதனை தொடர்ந்து 200 ரன்கள் எனும் இலக்குடன் களமிறங்கிய நிலையில், 95 ரன்கள் சேர்த்த ஜெர்மைன் பிளாக்வுட்டின் சிறப்பான ஆட்டம் மூலம் வெஸ்டிண்டிஸ் வெற்றிபெற்றுள்ளது, மேலும் 8 விக்கெட்டுகள் வீழ்த்திய, மேற்கிந்திய தீவுகள் அணியின் ஷானன் கேப்ரியல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்