டி-20 தொடரை தொடர்ந்து, இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் 2-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி அதிரடியாக கைப்பற்றியது.
வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, 3 டி-20, 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் டி-20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி, 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனைதொடர்ந்து முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்றதை தொடர்ந்து இரண்டாம் போட்டி, நேற்று விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் இலங்கை அணி களமிறங்கியது. தொடக்கத்தில் சற்று சொதப்பிய இலங்கை அணி, பின்னர் அதிரடியாக ஆடத் தொடங்கியது. இறுதியாக இலங்கை அணி, 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 273 ரன்கள் அடித்தது. இதில் அதிகபட்சமாக குணத்திலகா 96 ரன்களும், சந்திமல் 71 ரன்களும் எடுத்து அசத்தினார்கள்.
அதனைதொடர்ந்து 274 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது பேட்டிங்கை தொடங்கியது. அதிரடி தொடக்கத்தை கொடுத்த தொடக்க ஆட்டக்காரர்களாக எவின் லீவிஸ் – சாய் ஹோப் கூட்டணி அரைசதம் விலாச, 192 ரன்கள் அடித்தது. அதன்பின் 103 ரன்கள் அடித்து எவின் லீவிஸ் வெளியேற, அவரையடுத்து மறுமுனையில் இருந்த சாய் ஹோப் 84 ரன்கள் அடித்து வெளியேறினார்.
இறுதியான 49.4 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி, 5 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் அடித்து, ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஏற்கனவே டி-20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றிய நிலையில், தற்பொழுது ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…