எளிதாக வெற்றிபெற்றது மேற்கு இந்திய தீவுகள் அணி!7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது
12 வது உலகக்கோப்பை தொடரின் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது.இந்த போட்டி நாட்டிங்காம்மில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி கேப்டன் ஹோல்டர் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதன் பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி தனது மோசமான ஆட்டத்தால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து.
இறுதியாக பாகிஸ்தான் அணி 21.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்கள் மட்டுமே அடித்தது.மேற்கு இந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில் தாமஸ் 4,ஹோல்டர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.இதன் பின் 106 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கு இந்திய தீவுகள் அணி களமிறங்கியது.
ஆரம்ப முதலே மேற்கு இந்திய தீவுகள் அணி அதிரடியாக விளையாடியது.இறுதியாக மேற்கு இந்திய தீவுகள் அணி 13.4 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 108 ரன்கள் அடித்தது.இதன் மூலம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. மேற்கு இந்திய தீவுகள் அணியில் அதிகபட்சமாக கிறிஸ் கெயில் 50 ,பூரன் 34 ரன்கள் அடித்தார்கள்.பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் அமீர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.