ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி..!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்று பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் விளையாடவுள்ளது. இதில் முதல் இரண்டு டி20 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இரண்டிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று (2-0) என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதில் இரண்டாவது டி20 போட்டி நேற்று செயிண்ட் லூசியாவில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தனர். முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தனர். அதிகபட்சமாக ஹெட்மியர் (61) ரன்களும், டுவைன் பிராவோ (47) ரன்களும் எடுத்தனர்.
அடுத்ததாக 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 19.2 ஓவர்களில் 10 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் மட்டுமே எடுத்து. இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
லேட்டஸ்ட் செய்திகள்
அவரை சமாளிப்பது எல்லாம் திமுகவுக்கு தூசு மாதிரி…அமைச்சர் ரகுபதி விமர்சனம்..சீமான் சொன்ன பதில்?
March 2, 2025
குட் பேட் அக்லி படத்தில் அஜித் போட்டிருக்கும் டிரஸ் எவ்வளவு தெரியுமா? விலை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!
March 2, 2025