ENG vs WI முன்னிலையில் நிற்கும் வெஸ்ட் இண்டீஸ்..!

Default Image

இங்கிலாந்து-வெஸ்டிண்டிஸ் நாட்டிற்கு இடையே 3 தொடர்களை கொண்ட டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளதாக அறிவித்தது. இந்த நிலையில் அந்த தொடரின் முதல் போட்டி, நேற்று தொடங்கியது 117 நாட்களுக்கு பிறகு நடைபெற்ற இந்த கிரிக்கெட் தொடரில், கொரோனா அச்சம் காரணமாக ரசிகர்கள் மைதானத்தில் போட்டிகளை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில் முதல் போட்டியில் பலத்த மழை காரணமாக 17.4 ஓவர்கள் மட்டுமே பந்து வீசப்பட்டன. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி வெஸ்டிண்டிஸ் அணியின் அபார பந்து வீச்சால் 204 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 57 ரன்கள் எடுத்திருந்தது. கிரேக் பிராத்வெய்ட் 20 ரன்களுடனும், ஷாய் ஹோப் 3 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

மேலும் 3-வது நாளான நேற்று வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தொடர்ந்து பேட்டிங் செய்தனர். பேட்டின்ங்கில் மாஸ் காட்டி 102 ரன்களாக உயர்ந்த போது ஷாய் ஹோப் 16 ரங்களுடனும் டாம் பெஸ்சின் சுழற்பந்தால் ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் அரைசதத்தை கடந்த பிராத்வெய்ட், பென் ஸ்டோக்சின் ஒரே ஒவரில் 3 பவுண்டரி விளாசியதோடு அந்த ஒவரில் ஆட்டமிழந்தார் . இதன் பின்னர் ஷமார் புரூக்ஸ் 39 ரன்னிலும், ஜெர்மைன் பிளாக்வுட் 12 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர்.

இதைத் தொடர்ந்து ரோஸ்டன் சேசும், விக்கெட் கீப்பர் ஷேன் டாவ்ரிச்சும் சேர்ந்து தனது பயங்கரமான ஆட்டத்தை ஸ்கோர் 267 ரன்களை எட்டிய போது இந்நிலையில்  இந்த கூட்டணியை ஆண்டர்சன்  பந்து வீச்சால் உடைத்தார்.

மேலும் போட்டியின் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 318 ரன்களுகள் 102 ஓவர்களில் அடித்து ஆல் அவுட் ஆனது. மேலும் இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டும், டாம் பெஸ் 2 விக்கெட்டும் கைப்பற்றினர். அடுத்து 114 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சை ஆடியது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்