8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் வெஸ்ட் இண்டீஸ் அணி…!சதத்தை தவறவிட்ட ஹோப் ..!
8 விக்கெட்டுகளை இழந்து வெஸ்ட் இண்டீஸ் அணி தடுமாறி வருகிறது.
இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. அதேபோல் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.ஒரு நாள் தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் வெற்றியும்,இரண்டாவது ஒருநாள் போட்டி சமனிலும் முடிந்தது.பின்னர் மூன்று 20 ஓவர் போட்டிகளிலும் பங்கேற்கிறது.
இந்நிலையில் 3வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதன் பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 44 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் அடித்துள்ளது.வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக ஹோப் 95 ரன்கள் அடித்தார்.மற்ற வீரர்கள் சரியாக அடிக்கவில்லை.
இந்திய அணியின் பந்துவீச்சில் பூம்ரா 3,குல்தீப் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.