வெஸ்ட் இண்டீஸ் ஆல் ரவுண்டர் கெவின் சின்க்ளேர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது தனது முதல் டெஸ்ட் விக்கெட்டை எடுத்த பிறகு கார்ட்வீல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு அனைவரையும் திகைக்க வைத்தார். ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் பகல்-இரவு ஆட்டமாக நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 311 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர், களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி முதலில் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய உஸ்மான் கவாஜா சிறப்பாக விளையாடி 75 ரன்கள் எடுத்து 8-வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.
மேட்ச் பிக்சிங்கில் சோயிப் மாலிக்? ஒப்பந்தத்தை ரத்து செய்த பிபிஎல் நிர்வாகம் !
உஸ்மான் கவாஜா, வெஸ்ட் இண்டீஸ் அணியின் அறிமுகம் வீரரான சுழற்பந்து வீச்சாளர் கெவின் சின்க்ளேர் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்படி, சிறப்பாக விளையாடி வந்த உஸ்மான் கவாஜா, கெவின் சின்க்ளேர் பந்தை தூக்கி அடிக்க முயற்சித்த போது முதல் ஸ்லிப் திசையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். டர்னிங் டெலிவரி மூலம் உஸ்மான் கவாஜாவின் முக்கியமான விக்கெட்டை கெவின் சின்க்ளேர் பெற்றார்.
முதல் ஸ்லிப்பில் கேட்சை பிடித்து அலிக் அதானாஸ் அசத்தினார். எனவே, நீண்ட நேரமாக களத்தில் நின்ற கவாஜாவின் விக்கெட்டை அறிமுக போட்டியில் வீழ்த்திய உற்சாகத்தில், கெவின் சிசின்க்ளேர் ஜிம்னாஸ்டிக் வீரர்களை போன்று டைவ் அடித்து (Cartwheel Celebration) சந்தோசத்தை வெளிப்படுத்தினார். அவரது “கார்ட்வீல்” கொண்டாட்டத்தால் அனைவரையும் திகைக்க வைத்தார். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…
சிட்னி : பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரை ஆஸ்ரேலியா கைப்பற்றியுள்ளது இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த டெஸ்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி மாதம் டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில்…
சென்னை : எழும்பூர் அரசு அருங்காட்சியகக் கலையரங்கில் சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி பன்னாட்டுக் கருத்தரங்கு…
மும்பை : ஷங்கர் இயக்கத்தில் அரசியல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வரும் ஜனவரி 10-ஆம்…