ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் இருந்து வெளியேறியது வெஸ்ட் இண்டீஸ்..! ரசிகர்கள் அதிர்ச்சி..!
இந்த ஆண்டிற்கான ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் அணி வெளியேறியது.
இரண்டுமுறை உலகக்கோப்பை சாம்பியனான, மேற்கிந்தியத் தீவுகள் அணி முதன்முறையாக 2023ம் ஆண்டிற்கான ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாடாமல் தகுதிச்சுற்று ஆட்டத்தோடு வெளியேறுகிறது.
ஏனெனில் சனிக்கிழமையன்று ஸ்காட்லாந்திற்கு எதிரான தகுதிச்சுற்று போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததை அடுத்து மேற்கிந்திய தீவு அணி வெளியேறுகிறது.
இதில் முதலில் பேட் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 43.5 ஓவர்களில் 181 ரன்களுக்கு ஆட்டமிழந்தது, ஜேசன் ஹோல்டர் அதிகபட்சமாக 45 ரன்களும், ரோமரியோ ஷெப்பர்ட் 36 ரன்களும் எடுத்தனர்.
ஆனால், மேத்யூ கிராஸ் (74), பிராண்டன் மெக்முல்லன் (69) ஆகியோரின் உதவியுடன் 43.3 ஓவர்களில் ஸ்காட்லாந்து வெற்றி இலக்கை எட்டியது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ஸ்காட்லாந்து பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
1975 மற்றும் 1979 ஆண்டுகளில் நடைபெற்ற முதல் மற்றும் இரண்டாம் உலககோப்பைகளின் சாம்பியன்களான வெஸ்ட் இண்டீஸ் அணி, 48 ஆண்டுகால வரலாற்றில் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் 10 அணிகளில் இடம்பெறாதது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.