டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 150 ரன்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா 8 ரன்கள் எடுத்துள்ளது.
மேற்கிந்திய தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கிடையே டாமினிகா மைதானத்தில் நேற்று இரவு 7.30 மணியளவில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. கேப்டன் ரோஹித் தலைமையில் இந்திய அணியும், கிரைக் ப்ராத்வைட் தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் களமிறங்கின.
நேற்றைய முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாட ஆரம்பித்தது. இதில் முதலில் களமிறங்கிய வெஸ்ட இண்டீஸ் அணி தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான ப்ராத்வைட் மற்றும் சந்தர்பால் கூட்டணி ரசிகர்ளுக்கு ஏமாற்றம் அளித்து முறையே 20 , 12 ரன்கள் என அவுட் ஆகி வெளியே சென்றனர் .
அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட் ஆக அலிக் அத்தானாஸ் மட்டும் கொஞ்சம் நிதானித்து விளையாடி 47 ரன்கள் எடுத்து இருந்தார். முதல் நாளிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மேற்கிந்திய அணி 64.3 ஓவர்களில் 150 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது.
இந்திய அணி சார்பாக அஷ்வின் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சிராஜ் மற்றும் தாகூர் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
அதன் பிறகு களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் நிதானமாக தங்கள் ஆட்டத்தை துவங்கியுள்ளனர். இவர்கள் முறையை 30 மற்றும் 40 ரன்கள் எடுத்துள்ளனர்.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…