INDvsWI :இஷாந்த் சர்மா பந்து வீச்சில் திணறிய வெஸ்ட் இண்டீஸ் அணி..!

இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ய முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழந்து 203 ரன்கள் எடுத்திருந்தது.
தொடக்க வீரரான ராகுல் 44 ரன்களும் , மத்தியில் களமிறங்கிய ரஹானே 81 ரன்கள் குவித்ததன் மூலம் இந்திய அணியை சரிவில் இருந்து மீண்டது. பின்னர் நேற்று இரண்டாவது நாள் போட்டியில் விளையாடிய ஜடேஜா மற்றும் பண்ட் நிதான ஆட்டத்தால் இந்திய அணி 297 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
சிறப்பாக விளையாடிய ஜடேஜா 51 ரன்கள் குவித்தார்.இதைத் தொடர்ந்து நேற்று தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆட்டம் கிரெய்க் பிராத்வைட் தொடக்கத்திலேயே 14 ரன்களுடன் வெளியேற பின்னர் இறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற மத்தியில் களமிறங்கிய ரோஸ்டன் சேஸ் 48 ரன்கள் குவித்தார்.
நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் இழந்து 189 ரன்கள் குவித்தது. இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்க உள்ளது.இந்திய அணி சார்பில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டை வீழ்த்தி உள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி கொள்கை விவகாரம் முதல்! “இந்தியா” கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் வரை!
February 18, 2025
படித்தது CBSE., பொதுத்தேர்வு மாநில பாடத்திட்டத்தின் கீழ்? பட்டுக்கோட்டையில் புது குழப்பம்!
February 18, 2025
நள்ளிரவில் தேர்தல் ஆணையரை நியமித்தது ஏன்? ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
February 18, 2025
குல்தீப்பா? சக்கரவர்த்தியா? போட்டிக்கு முன் அடித்துக்கொள்ளும் ரோஹித் சர்மா vs கம்பீர்.!
February 18, 2025
பெண்களுக்கென ‘பிங்க் ஆட்டோ’ திட்டம்… எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
February 18, 2025