டி20I: 2024ம் ஆண்டில் நடைபெற்று வரும் டி20 உலககோப்பை தொடரின் இன்றைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி, நியூஸிலாந்து அணியை வீழ்த்தி அடுத்த சுற்றான சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
தற்போது அமெரிக்கா மட்டும் வெஸ்ட் இண்டீஸ் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் இன்றைய 26-வது போட்டியில் நியூஸிலாந்து அணியும், வெஸ்ட் இண்டீஸ் அணியும் டொராண்டோவில் உள்ள பிரைன் லாரா மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது.
அதன்படி பேட்டிங் களமிறங்கியது வெஸ்ட் இண்டீஸ் அணி, அதில் தொடக்கத்தில் மோசமாக 30-5 தடுமாறியது வெஸ்ட் இண்டிஸ் அணி. அதன் பின் ஷெர்பேன் ரதர்ஃபோர்ட் அதிரடியால் வெஸ்ட் இண்டீஸ் அணி சரிவிலிருந்து மீண்டது, அவரது 39 பந்துக்கு 68 ரன்கள் என்ற அதிரடியால் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 149 ரன்கள் எடுத்தது.
நியூஸிலாந்து அணியில் அதிகபட்சமாக போல்ட் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தி இருந்தார். அதனை தொடர்ந்து நியூஸிலாந்து அணி பேட்டிங் களமிறங்கியது, நல்ல ஒரு தொடக்கத்தை அமைத்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து விளையாடினாலும், தொடர்ந்து ஒரு பார்ட்னெர்ஷிப் இல்லாத காரணத்தினால் நியூஸிலாந்து அணி 11 ஓவர்களுக்கு மேல் ரன்களை எடுக்க திணற தொடங்கியது.
இதன் காரணமாக நியூஸிலாந்து அணி இலக்கின் அருகில் சென்றாலும், இலக்கை எட்ட முடியாமல் தோல்வியடைந்தது. இதனால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. நியூஸிலாந்து அணியில் அதிகபட்சமாக க்ளென் பிலிப்ஸ் 40 ரன்கள் எடுத்திருந்தார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியில் அல்சாரி ஜோசப் 4 விக்கெட்டும், குடாகேஷ் மோடி 3 விக்கெட்டும் கைப்பற்றி அசத்தினார்கள். இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்த சுற்றான சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது, மேலும் இந்த போட்டியில் தோல்வியடைந்ததால் நியூஸிலாந்து இந்த தொடரில் 2 தோல்விகளுடன் பரிதாபமான நிலையில் புள்ளிப்பட்டியலில் இருந்து வருகின்றனர்.
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…