அமெரிக்காவை பந்தாடிய வெஸ்ட் இண்டீஸ்!! புள்ளிப்பட்டியலில் முன்னிலை!!

Published by
அகில் R

டி20I சூப்பர் 8: டி20 உலகக்கோப்பை தொடரின் இன்று நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், அமெரிக்கா அணியும் மோதியது.

நடப்பாண்டில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றின் 6-வது போட்டியும், இத்தொடரின் 46-வது போட்டியுமான இன்று நடைபெற்ற போட்டியில் பார்படாஸில் உள்ள கேனிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், அமெரிக்கா அணியும் மோதியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி பேட்டிங் களமிறங்கிய அமெரிக்கா அணி தட்டு தடுமாறிய ரன்களை சேர்த்து.

எந்த ஒரு வீரரும் நிலைத்து ஆடாமல், அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து மோசமாக விளையாடியது. இதனால், 19.5 ஓவர்களில் 10 விக்கெட்டையும் இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் ரஸ்ஸல் மற்றும் ரோஸ்டன் சேஸ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர்.

இதனால், எளிய இலக்கை எடுக்க களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரரான சாய் ஹோப் மட்டுமே தனி ஆளாக நின்று அமெரிக்கா அணியின் பவுலர்களை பறக்கவிட்டு ஆட்டமிழக்காமல் 39 பந்துக்கு 82* ரன்களை எடுத்து வெற்றிக்கு வித்திட்டார்.

அதிரடியாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 10.5 ஓவர்களில் 130 ரன்களை எடுத்து அபார வெற்றியை ருசித்தது. இதனால், 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி முன்னிலை பெற்றுள்ளது.

Published by
அகில் R

Recent Posts

பூமியில் சுனிதா வில்லியம்ஸ் எப்போது தரையிறங்குவார்? நேரலையில் பார்ப்பது எப்படி..விவரம் இதோ!

கலிபோர்னியா : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விண்கலம்…

2 hours ago

மயக்கம் போட்ட பெண்…ஆவேசத்துடன் காவல்துறையிடம் வாக்குவாதம் செய்த அண்ணாமலை, தமிழிசை!

சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…

4 hours ago

விசில் போடு! சென்னை – மும்பை போட்டியை பார்க்க ரெடியா? டிக்கெட் விற்பனை அப்டேட் இதோ!

சென்னை : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் போட்டியை…

5 hours ago

“பாஜகவின் அடியாள் ED…அதைவச்சு பழிவாங்குறாங்க”அமைச்சர் ரகுபதி காட்டம்!

சென்னை : டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியதாகவும், இதில் டெண்டர்…

5 hours ago

விஜய் வர்மாவுடன் காதல் முறிவா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தமன்னா?

சென்னை : நடிகை தமன்னா கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். இருவரும் கடந்த 2022-ஆம் ஆண்டிலிருந்து…

6 hours ago

“திருமா எங்களோடு போராட வேண்டும்!” பாஜக எம்எல்ஏ பகிரங்க அழைப்பு!

சென்னை : டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை கூறியிருந்த நிலையில். டாஸ்மாக் முறைகேட்டிற்கு எதிராக பாஜகவினர்…

6 hours ago